சமந்தா நடிக்கும் ‘யசோதா’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | Yashoda

0
Samantha's Yashoda Movie Release Date Locked
Samantha's Yashoda Movie Release Date Locked

சமந்தா நடிக்கும் ‘யசோதா’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு: தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையான சமந்தா, தெலுங்கில் ‘யசோதா’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பான் இந்திய படமாக உருவாகும் இப்படத்தை Sridevi Movies சார்பில் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் தயாரிக்க, ஹரி-ஹரீஷ் என்கிற இரட்டையர்கள் இயக்கி வருகின்றனர். இப்படத்தில் சமந்தா உடன், வரலக்‌ஷ்மி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்து வருகின்றனர். 

 

இந்நிலையில் தற்போது இப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, வரும் ஆகஸ்ட் 12-ஆம் தேதி யசோதா திரைப்படம் உலகமெங்கும் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Samantha's Yashoda Movie Release Date Locked
Samantha’s Yashoda Movie Release Date Locked

இது குறித்து தயாரிப்பாளர் சிவலெங்கா கிருஷ்ணபிரசாத் கூறியதாவது, “நடிகை சமந்தா “யசோதா” படத்தில் நடிப்பில் மட்டுமின்றி சண்டைக்காட்சிகளிலும் அசத்தியுள்ளார். ஒரே நேரத்தில் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் படத்தை ஆகஸ்ட் 12ஆம் தேதி வெளியிடுகிறோம். மே மாத இறுதியில் படப்பிடிப்பு முடிவடையும். இந்த ஆக்சன் த்ரில்லர் திரைப்படம் இந்திய அளவிலான பார்வையாளர்களை திரையரங்குகளுக்கு இழுக்கக்கூடிய கதைக்களத்தை கொண்டுள்ளது. சமீபத்தில் ஒரு பிரமாண்ட செட்டில் ஒரு பெரிய ஷெட்யூலை முடித்துவிட்டு, இன்று கொடைக்கானலில் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்கு செல்கிறோம்.

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்