தென்னிந்திய முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா, கொரோனா ஊரடங்கால் தனது கணவருடன் ஹைதராபாத்தில் வசித்து வருகிறார்.


படப்பிடிப்புகள் ஏதுமில்லாததால் வீட்டிலேயே காய்கறிகள் வளர்ப்பது, சமைப்பது, தனது நாய்க்குட்டி என இருந்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா அவ்வபோது தனது படங்கள், நண்பர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என ஏதாவது பதிவிட்டு கொண்டே இருப்பார். அந்த சமந்தா பதிவிட்ட ஒரு படம் தற்போது பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன், தனது நெருங்கிய தோழியும் பேஷன் டிசைனருமான அதோடு ஷில்பா ரெட்டியின் கன்னத்தில் சமந்தா முத்தம் கொடுக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தார்.


இந்நிலையில் ஷில்பா ரெட்டி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஷில்பா கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு பாசிட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளதாக அவரே தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்புதான், ஷில்பாவுக்கு முத்தம் கொடுக்கும் போட்டோவை சமந்தா வெளியிட்டிருந்தர். சமீபத்தில் தானே சந்தித்துக்கொண்டார்கள், அதனால் சமந்தாவிற்கும் கொரோனா தொற்று பரவி இருக்குமோ என்று அவரது ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர். மேலும் இந்த செய்தி இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
———————– மேலும் உங்கள் பார்வைக்கு ————————-
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘பெண்குயின்’ வரும் ஜூன் 19 முதல் அமேசான் பிரைமில்
👉 ஜோதிகா, கீர்த்தி சுரேஷை தொடர்ந்து OTT -ல் வெளியாகும் வரலக்ஷ்மியின் திரைப்படம்!
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...