சமந்தா நலமுடன் இருக்கிறார்! வெளியான செய்தியில் உண்மையில்லை: நடிகை சமந்தாவிற்கு மிகவும் அரிதான மயோசிட்டிஸ் என்ற நோய் பாதிக்கப் பட்டுள்ளதாகவும் அதற்காக சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரே தெரிவித்திருந்தார். நேற்று திடீரென மீண்டும் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சமந்தா அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. எதனால் அனுமதிக்கப்பட்டார் என்கிற விவரம் இதுவரை தெரியவில்லை.

சமந்தாவின் தரப்பிலோ, குறிப்பிட்டமருத்துவமனை தரப்பிலோ எந்தவொரு அறிக்கையும் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில் தற்போது சமந்தாவின் செய்தி தொடர்பாளர் இதுக்குறித்து விளக்கமளித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது, “சமந்தா அவரது வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார், மேலும் நலமுடன் உள்ளார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல்கள் உண்மையில்லை” என கூறியுள்ளார்.
எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
FACEBOOK – TWITTER – INSTAGRAM – YOUTUBE