தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்போது காய்கறிகள் வளர்ப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.


‘மாஸ்கோவின் காவிரி’ படத்தின் மூலம் அறிமுகமான நடிகை சமந்தா, தமிழில் ஆரம்பகாலம் கைக்கொடுக்காததால் தெலுங்கு பக்கம் சென்றார். அங்கு ஹிட் அடிக்கவே முன்னணி நடிகையாக மாறினார், நாகார்ஜுனா மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்டு அங்கேயே செட்டிலும் ஆகிவிட்டார். திருமணத்திற்கு பிறகு யூ டர்ன் மற்றும் ஓ பேபி ஆகிய படங்கள் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்க அதுவும் பெரியளவு ஹிட் ஆனது. இப்படி சினிமா வாழ்க்கை வெற்றிகரமாக நகர, சமந்தா தற்போது தற்போது காய்கறிகள் வளர்ப்பதில் பிசியாகியுள்ளார். தனது வீட்டு மாடிலே மாடி தோட்டம் அமைத்து காய்கறி செடிகளை வளர்த்து வருகிறார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் தொடர்ந்து இதுக்குறித்து பகிர்ந்து வருகிறார். இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள அவர், நமக்கு தேவையான காய்கறிகளின் விதையை விதைத்து தண்ணீர் ஊற்றி சூரிய வெளிச்சத்தில் வைத்து பராமரிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
———————– மேலும் உங்கள் பார்வைக்கு ————————-
👉 சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘டாக்டர்’ பட பிரத்யேக படங்கள்
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...