அக்கா சமந்தா, தங்கை ராஷ்மிகா! தெலுங்கு லேட்டஸ்ட் பட தகவல்

0
Samantha and Rashmika act together as Sisters

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளான சமந்தா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் ஒரு படத்தில் இணையவுள்ளனர். அதுவும் அக்கா, தங்கை கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Samantha and Rashmika act together as Sisters
Samantha – Rashmika

தெலுங்கு சினிமாவில் மல்டி ஹீரோ, மல்டி ஹீரோயின்ஸ் நடிப்பது சகஜம் தான், எனினும் தற்போதைய மார்கெட் மற்றும் பிசினஸ் சூழ்நிலையில் முன்னணி நடிகைகள் இணைவது அவரது ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கில் உருவாகும் இப்படத்தில் அக்காவாக சமந்தாவும் தங்கையாக ராஷ்மிகா வும் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பெண்களை மையப்படுத்திய கதையை களமாக கொண்டு இப்படம் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது. எனினும் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

சமந்தா தற்போது தனது அடுத்த தமிழ் படமான ‘காத்துவாக்குல இரண்டு காதல்’ படத்தில் நடிக்கவுள்ளார். விக்னேஷ்சிவன் இயக்கவுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா ஆகியோரும் முன்னணி பாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். ராஷ்மிகா, அல்லு அர்ஜுன் நடிப்பில் புஷ்பா, தமிழில் கார்த்தியுடன் சுல்தான் உள்ளிட்ட முக்கிய படங்களை தன் கைவசம் வைத்துள்ளார்.

 

சினேகா வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் வீடியோ

கொட்டும் மழையில் அட்டகாச போட்டோஷூட் நடத்திய தர்ஷா குப்தா!

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...