‘மாஸ்கோவின் காவிரி’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி, தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வருபவர் நடிகை சமந்தா.


தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்துக்கொண்டு ஹைதராபாத்தில் தற்போது வசித்து வருகிறார். திருமணத்திற்கு பிறகும் தனது சினிமா வாழ்க்கையில் வெற்றிக்கரமான வலம்வரும் சமந்தாவிடம் பெரும்பாலானோர் கேட்கும் கேள்வி உங்களுக்கு எப்பொழுது குழந்தை பிறக்கும்? என்பது தான். இதற்கு பலமுறை பதிலளித்துள்ள சமந்தா, அந்த கேள்வியை கண்டாலே கோபப்படும் அளவிற்கு தற்போது மாறியுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் ரசிகர்களுடன் நடந்த உரையாடலில், மீண்டும் இந்த கேள்வி ரசிகர் ஒருவரால் முன்வைக்கப்பட்டது. இதற்கு சமந்தா கூறிய பதில், “ஆமாம் நான் கடந்த 2017-ம் ஆண்டில் இருந்து கர்ப்பமாக தான் உள்ளேன். ஏனோ தெரியவில்லை இந்த குழந்தை வெளியே வரமாட்டேன் என்று அடம் பிடிக்கிறது” என நக்கலாக பதிலளித்துள்ளார்.
வீடியோ:
லாஸ்லியா நடிக்கும் கிரைம் திரில்லர் திரைப்படம்! புதுப்பட தகவல்
நடிகை ரைசா வில்சனின் ஓணம் சிறப்பு படங்கள்!
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...