காலா, விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த சாக்ஷி அகர்வாலுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி பெரிய பிரபலத்தை கொடுத்தது. அந்த பிரபலத்தை சரியாக பயன்படுத்திய சாக்ஷி, தற்போது சிண்ட்ரெல்லா, அரண்மனை 3, டெடி, ஆயிரம் ஜென்மங்கள், புறவி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.


இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் சாக்ஷி, சமீபத்தில் பகிர்ந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது. தான் சிறிய வயதில் எப்படி இருந்தேன், தற்போது எப்படி இருக்கிறேன் என இரு படங்களை பதிவிட்டு, கீழே உருக்கமான பதிவை எழுதியுள்ளார். அதில் குறிப்பிட்டுள்ளதாவது, “இந்த இரண்டு பேரும் ஒரே ஆள் தான் என்பதை எத்தனை பேர் நம்புகிறீர்கள். ஆம், அது நான் தான். முகத்தில் உள்ள சதையை குறைப்பது தான் எனக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது. ஆம், நான் பள்ளியில் எனது வகுப்பு மாணவர்கள் மற்றும் சீனியர்களால் உருவ கேலிக்கு ஆளானேன். சிலர் என்னை மண் மண்டை எனவும், புத்தக புழு எனவும் குண்டு பூசணிக்காய் எனவும் அழைப்பார்கள். அப்போது படிப்பு மட்டுமே என் மண்டையில் இருந்தது. எனது கொழுக் மொழுக் முகத்தை நான் ரசித்தேன், விரும்பினேன். இப்போது இருக்கும் முகத்தையும் விரும்புகிறேன். கொழுப்பை குறைக்க நான் உடலை பட்டினிப் போட்டதில்லை.


நான் இன்று எப்படி இருக்கிறேனோ அதை அப்படியே விரும்புகிறேன். எனக்காக மட்டும் தான் எடையை குறைத்தேன். அதற்காக நான் பட்டினி கிடக்கவில்லை அல்லது கத்திக்கு கீழ் நிற்கும் எந்த வேலையையும் செய்யவில்லை. உடற்பயிற்சியுடன் கூடவே மன தைரியம், கடின உழைப்பு, ஈடுபாடு உங்களை வாழ்வில் எங்கு வேண்டுமானாலும் அழைத்துச் செல்லும்” என பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Sakshi Agarawal Latest Instagram Post:
—————————மேலும் உங்கள் பார்வைக்கு—————————–
எங்களது யூடியூப் சேனலை பார்க்க, படித்திருந்தால் SUBSCRIBE செய்யவும்…
* புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவிய வரலட்சுமி சரத்குமார்
* மருத்துவமனையில் நடிகர் பொன்னம்பலம் உதவிக்கரம் நீட்டிய கமல்ஹாசன்!
* சிவப்பு உடையில் பளபளக்கும் அழகு! சஞ்சிதா ஷெட்டி லேட்டஸ்ட் படங்கள்
* 50 சதவிகித சம்பளத்தை குறைத்து கொண்ட ரகுல் ப்ரீத் சிங்!
* அனுபமா பரமேஸ்வரன் லேட்டஸ்ட் அழகிய படங்கள்
* த்ரிஷாவை எச்சரித்த மீரா மிதுன்! ஏன் எப்படி என ரசிகர்கள் காட்டம்
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...