‘சாணிக் காயிதம்’ திரைப்பட விமர்சனம் | Saani Kaayidham Movie Review & Rating

0
Saani Kaayidham Movie Review & Rating
Saani Kaayidham Movie Review & Rating

‘சாணிக் காயிதம்’ திரைப்பட விமர்சனம் | Saani Kaayidham Movie Review & Rating

படக்குழு:

நடிகர்கள்: கீர்த்தி சுரேஷ், செல்வராகவன், கண்ணா ரவி மற்றும் பலர்.

இசை: சாம் CS 

ஒளிப்பதிவு: யாமினி யக்னாமூர்த்தி

எடிட்டிங்: நாகூரான்

தயாரிப்பு: டிரைடன்ட் ஆர்ட்ஸ் 

இயக்கம்: அருண் மாதேஸ்வரன்

OTT: அமேசான் பிரைம்.

Saani Kaayidham Movie Review & Rating
Saani Kaayidham Movie Review & Rating

கதைச்சுருக்கம்:

போலீஸாக வரும் நாயகி கீர்த்தி சுரேஷ், புருஷன், மகள் என நிம்மதியாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறார். கீர்த்தி சுரேஷின் கணவர் அரிசி மில்லில் வேலை பார்த்து வரும் நிலையில், அந்த அரிசி மில் ஓனருடன் பிரச்சனை ஏற்படுகிறது. ஒருக்கட்டதில் கீர்த்தி சுரேஷின் கணவர் மற்றும் மகளை தீவைத்து எரித்து கொலை செய்ய, கீர்த்தியையும் பாலியல் துன்புறுத்துகின்றனர். பிறகென்ன, தன் குடும்பத்தை அழித்தவர்களை தனது அண்ணன் செல்வராகவனுடன் சேர்ந்து கொடூரமாக பழிவாங்கும் படலமே இப்படத்தின் கதைச்சுருக்கம். 

Saani Kaayidham Movie Review & Rating
Saani Kaayidham Movie Review & Rating

FC விமர்சனம்:

ராக்கி என்கிற படத்தின் மூலம் அறிமுகமாகி தான் எடுக்கும் படங்களில் இரத்தத்தை தெறிக்க விடுவது தான் முக்கிய குறிக்கோள் என இருக்கும் இயக்குனர் அருண் மாதேஸ்வரன், செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் கூட்டணியில் உருவாகியுள்ள இந்த சாணிக் காயிதம் அமேசான் பிரைமில் நேரடியாக வெளியாகியுள்ளது. வாருங்கள் படம் எப்படி என பார்ப்போம். நடிகர்களை பொறுத்தவரை பொன்னியாக வரும் கீர்த்தி சுரேஷ் எமோஷனல், பழிவாங்கும் வெறி என படமுழுக்க மிரட்டியுள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு சொல்லிக்கொள்ளும் அளவிற்கான கதாப்பாத்திரம், அதேபோல் சற்றும் குறையாத செல்வராகவன் மனுஷன் அசால்ட்டாக நடித்துள்ளார். எந்த இடத்திலும் உறுத்தல் இல்லை.

இவர்கள் இருவரது பாத்திரங்களுக்கு மட்டுமே அதிகமாக முக்கியத்துவம் கொடுக்கப் பட்டுள்ளது. மற்ற வரும் வில்லன்கள் உள்பட அனைவரும் கொடுத்த வேலையை சரியாக செய்துள்ளனர்.  பல வருடங்களாக பார்க்கும் அதே பழிவாங்கும் கதைதான் என்றாலும், மேகிங்கில்(மட்டுமே) தரத்தை உயர்த்தி ராவான படமாக கொடுத்துள்ளனர். இதற்கு யாமினியின் ஒளிப்பதிவும், நாகூரானின் எடிட்டிங்கும் பெரிய பலமாக அமைந்துள்ளது. ஒளிப்பதிவாளர் யாமினி யக்னாமூர்த்தி தமிழ் சினிமாவிற்கு கிடைத்துள்ள சிறந்த பொக்கிஷம் என சொல்லலாம். அதேபோல் சாம் CS-ன் பின்னணி இசையும் படத்தின் விறுவிறுப்பை கூட்டுகிறது. 

Saani Kaayidham Movie Review & Rating
Saani Kaayidham Movie Review & Rating

இப்படத்தின் குறையாக தெரிவது நாம் பார்த்து சலித்த கதை (ஏன்? இந்த இயக்குனர் அருண் மாதேஸ்வரனின் முந்தைய படமான ராக்கி இதே களம்தான்). அதை திரைக்கதையில் ஏதேனும் டுவிஸ்ட்டுடன் சொல்லியிருக்கிறாரா? என்றால் படத்தின் துவக்கத்திலிருந்தே அடுத்தடுத்து என்ன நடக்கும் என சிறு குழந்தை கூட யூகித்து சொல்லிவிடும். அந்தளவில் தான் இருக்கிறது திரைக்கதை. அதைவிட சுமார் 1.30 மணி நேரத்தில் முடியவேண்டிய படத்தை, ஒவ்வொரு காட்சியையும் ஜவ்வாக இழுத்து 2.15 மணி நேரத்திற்கு இழுத்துள்ளனர். இது சோர்வையும், சலிப்பையும் ஏற்படுத்துகிறது. மேலும், தனக்கென தனி பாணியை உருவாக்க வேண்டுமென நினைத்த இயக்குனர் இரத்தம் தெறிக்க பழிவாங்கும் டைப்பான படங்களை மட்டுமே எடுப்பேன் என சபதம் எடுத்துள்ளார் போல, முதல் படத்தில் இருந்ததை விட இப்படத்தில் அதிக வைலன்ஸ், கெட்ட வார்த்தைகள் எனவே குடும்பத்துடன் பார்க்கும் படமாக இப்படம் கண்டிப்பாக இருக்காது என்பது மேலும் ஒரு குறையாக அமைந்துள்ளது. இறுதியாக படம் எப்படி என்றால், உலக படங்களில் இரத்தம் தெறிக்கும் சைக்கோ தனமான படத்தை பார்க்க விரும்புகிறவர்களா நீங்கள்! இந்த படம் உங்களுக்காக!! மற்றபடி மேக்கிங் வகையில் சிறந்தும், கதை, திரைக்கதையில் சொதப்பிய ஓகே ரகமான படம்தான் இந்த சாணிக் காயிதம்.

Saani Kaayidham Movie FC Rating: 3 /5

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE 

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்