S.S.ராஜமௌலி வெளியிட்ட கொரோனா விழிப்புணர்வு வீடியோ

0
S. S. Rajamouli Share Corona Awareness Video

S.S.ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா டகுபட்டி, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், நாசர் என நட்சத்திரப் பட்டாளங்களுடன் வெளியான பிரமாண்ட திரைப்படம் பாகுபலி சீரிஸ். பாகுபலி 1 & 2 இரு படங்களிலும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் மாபெரும் வசூல் மழை பொழிந்து பல ரெக்கார்ட்களை உருவாக்கியது.   

S. S. Rajamouli Share Corona Awareness Video

தற்போது நிலவி வரும் கொரோனா தாண்டவத்தால் உலகமே விழிப்பிதுங்கி காணப்படுகிறது. அதிலும் இந்தியா தற்போதுதான் நாளுக்கு நாள் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. சமூக இடைவெளியை கடைபிடிப்பது, மாஸ்க் அணிவது, கை கழுவுவது என பல விஷயங்களை தீவிரமாக கடைப்பிடிக்கும் படி அரசு மக்களை கேட்டு வருகிறது. இது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பல்வேறு பிரபலங்களும் சமூக வலைத்தளங்கள் மற்றும் விளம்பரங்களில் இவற்றை செய்யும் படி மக்களை கேட்டு வருகின்றனர். அந்த வகையில் பாகுபலி இயக்குனர் S.S.ராஜமௌலி தற்போது ஒரு வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

S. S. Rajamouli

பாகுபலி 2 படத்தில் வரும் கிளைமாக்ஸ் காட்சியில் பிரபாஸ், ராணா எதிரெதிர் பார்க்கு காட்சியில் இருவரும் மாஸ்க் அணிந்து இருப்பது போல அந்த வீடியோ அமைந்துள்ளது. மாஸ்க் அணிவது அவசியம் என்பதை குறிப்பிடும் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Twitter Feed:

 

 

———————– மேலும் உங்கள் பார்வைக்கு ————————-

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘பெண்குயின்’ வரும் ஜூன் 19 முதல் அமேசான் பிரைமில்  

 

 

👉 ஜோதிகா, கீர்த்தி சுரேஷை தொடர்ந்து OTT -ல் வெளியாகும் வரலக்ஷ்மியின் திரைப்படம்!

👉 சாய் பல்லவி நடித்தால் நான் விலகி கொள்கிறேன் ராஷ்மிகா!

👉 புல்லட் ஓட்ட கற்றுக்கொள்ளும் போது தவறி விழுந்த ஷ்ரத்தா ஸ்ரீநாத்!

👉 சுஷாந்த் சிங் நடித்த கடைசி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி!

👉 சமந்தா முத்தமிட்ட நபருக்கு கொரோனா பாதிப்பு? உண்மை நிலவரம்

 

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…