RRR திரைப்பட விமர்சனம் | RRR Movie Review and Rating

0
RRR Movie Review and Rating
RRR Movie Review and Rating

RRR திரைப்படத்தின் திரை விமர்சனம் மற்றும் FC ரேட்டிங் இதோ. (RRR Movie Review and Rating)

படக்குழு:

நடிகர்கள்: Jr.NTR, ராம்சரண், அலியாபட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி, ஸ்ரேயா மற்றும் பலர்.

இசை: M.M.கீரவாணி

ஒளிப்பதிவு: K.K. செந்தில் குமார்

எடிட்டிங்: ஸ்ரீகர் பிரசாத்

தயாரிப்பு: DVV என்டர்டைன்மென்ட்ஸ்

இயக்கம்: S.S.ராஜமௌலி.

RRR Movie Review and Rating
RRR Movie Review and Rating

கதைச்சுருக்கம்:

ஆங்கிலேயர் இந்தியாவை கட்டுக்குள் வைத்திருந்த காலகட்டத்தில் படம் நகர்கிறது. ஆங்கிலேயர்களின் கோரப்பிடியில் மக்கள் அவதிப்படும் நேரம் அது, தங்கள் இனப்பெண் ஒருவரை ஆங்கிலேயர்கள் கூட்டி செல்ல, அந்த இனத்தின் காப்பாளனாக வரும் (ஒரு கதாநாயகன்) Jr.NTR  அந்த பெண்ணை காப்பாற்ற களமிறங்குகிறார். மறுபுறம், தங்களை எதிர்க்க வரும் Jr.NTR-ஐ உயிரோடவோ அல்லது பிணமாகவோ பிடித்து கொடுத்தால் உங்களுக்கு பதவி உயர்வு என கூறி களத்தில் இறக்கப்படும் (மற்றொரு கதாநாயகன்) ராம் சரண். இதன்பிறகு கொடுத்த வேலையை ராம் சரண் முடித்தாரா? என்ன நடந்தது? என்கிற சுவாரஸ்யமே கதைச்சுருக்கம்.

RRR Movie Review and Rating
RRR Movie Review and Rating

FC விமர்சனம்:

பாகுபலி என்கிற மிகப்பெரிய பிரம்மாண்டமான படைப்பை கொடுத்த இயக்குனர் SS ராஜமௌலி அடுத்து கொடுத்துள்ள பிரம்மாண்டம் தான் இந்த RRR. தெலுங்கு சினிமாவின் இரண்டு உச்ச நட்சத்திரங்களை வைத்து, பெரும் பொருட்செலவில் உருவாக்கியுள்ள இந்த RRR படம் எப்படி இருக்கு என்பதை இந்த விமர்சனத்தில் பார்ப்போம். நடிகர்களை பொறுத்தவரை Jr.NTR & ராம்சரன் இருவருமே தங்களது அதிகபட்ச உழைப்பை கொடுத்துள்ளது படத்தில் பல இடங்களில் கண்கூடாக தெரிகிறது. அந்தளவிற்கு சிறந்த நடிப்பு, நடனம், சண்டை என தெரிக்கவிட்டுள்ளனர். இவர்களை தவிர அலியா பட், அஜய் தேவ்கன் பாத்திரங்கள் சொல்லும்படியாக இருந்தாலும் பெரிய அளவு வாய்ப்பு இல்லை.

சுதந்திரத்திற்கு முன்பான பீரியட் படம் என்பதால் முழுக்க முழுக்க செட்டுக்குலேயே முக்கால்வாசி படபிடிப்புமே, ஆனால் எந்த காட்சியிலுமே செட் என பெரிதளவு நமக்கு தோன்றவில்லை மாறாக பிரம்மாண்டம் மட்டுமே தெரிகிறது. அந்தளவிற்கு கலை இயக்குனர் சாபுசிரிலின் வேலை பெரிய பலமாக அமைந்துள்ளது. அதேபோல் ஒளிப்பதிவு, சண்டைக் காட்சிகள், நடனம் என அனைவருமே தங்களது அதிகபட்ச உழைப்பையே கொடுத்துள்ளனர். VFX குழுவும் முடிந்தளவு குறையில்லாமல் கிராபிக்ஸ் பணிகளை கொடுத்துள்ளனர். அது நீங்கள் படம் பார்க்கும்போது உங்களுக்கு புரியும். MM கீரவாணியின் இசையில் பாடல்கள் ஹிட்டடித்த நிலையில், பின்னணி இசையிலும் குறையில்லை.

RRR Movie Review and Rating
RRR Movie Review and Rating

படத்தின் குறைவாக தெரிவது பெரும்பாலான காட்சிகள் நம்மை வியக்க வைத்தாலும், ஒரு சில இடங்களில் நமக்கு தொய்வு ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. மேலும், இந்த முழு படமுமே முழுக்க முழுக்க இந்த இரண்டு நாயகர்கள் மீதே செல்கிறது, இவர்களை தவிர வேறு யாருக்கும் எந்தவித வாய்ப்பும் பெரிதளவு இல்லை. இதுவே இந்த தொய்வுக்கு காரணமாக அமைந்துள்ளது. பிரபல பாலிவுட் நடிகர்கள் அஜய் தேவ்கன், அலியா பட், நம்ம சமுத்திரக்கனி,ஸ்ரேயா அனைவரும் பெயரளவில் வந்து செல்கின்றனர். இவர்களில் அஜய் தேவ்கனுக்காவது ஏதோ கொஞ்சம் சொல்லலாம். பான் இந்தியா படம் என்பதால் ஒவ்வொரு சினிமா ஏரியாவிலும் தெரிந்த முகங்களை மார்கெட்டிங்கிற்காக மட்டுமே பயன்படுத்தியுள்ளனர். 

அதேபோல் இவ்வளவு பெரிய படத்தில் வலுவான வில்லன் பாத்திரம் இல்லாதது ஏமாற்றமாக அமைந்துள்ளது. ராஜமௌலியின் முந்தைய படங்களில் ஹீரோ அளவிற்கு வில்லனுக்கு பெரிய முக்கியத்துவம் இருக்கும், வலுவாகவும் இருக்கும். ஆனால் அந்த ஒரு விஷயம் இப்படத்தில் மிஸ்ஸிங். தமிழ் டப்பிங்(பிற மொழிகளில் எப்படி என தெரியவில்லை) சொதப்பலாக அமைந்துள்ளது. பல இடங்களில் வரும் ஆங்கில, ஹிந்தி உரையாடல்கள் அப்படியே வருகிறது, தமிழில் இல்லை. இதெல்லாம்விட தெலுங்கு படங்களுக்கே உரித்தான இந்த லாஜிக் மீறல்கள் இப்படத்தில் ஏராளம். இறுதியாக படம் எப்படி என்றால், கமர்ஷியல் ரசிகர்களுக்கு ஒரு பெரிய விருந்து, மற்றவர்களுக்கு ஒரு நல்ல சினிமா அனுபவமாக இருக்க வாய்ப்புண்டு. 

    RRR Movie FC Rating: 3.5 /5    

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்