10 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களுரு அணி அபார வெற்றி | RCB vs SRH

0
Royal Challengers Bangalore Won the match

13-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 3-வது போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது, இப்போட்டியில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடியது. இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

Royal Challengers Bangalore Won the match
Royal Challengers Bangalore Won the match

இதையடுத்து களமிறங்கிய பெங்களுரு அணி 20 ஓவர் முடிவில் பெங்களுரு அணி 9 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்களை எடுத்தது. பெங்களுரு அணியில் அதிகபட்சமாக தேவ்தத் படிக்கல் 56 ரன்களும், டிவில்லியர்ஸ் 51 ரன்களும் எடுத்திருந்தனர். இதனையடுத்து 164 ரன்கள் இலக்காக கொண்டு களமிறங்கிய ஹைதராபாத் அணியின் அதிரடி ஆட்டக்காரர் டேவிட் வார்னர் 6 ரன்னில் ரன்அவுட் ஆனார். ஜானி பெயிர்ஸ்டோ நிதானமாக ஆடி 43 பந்துகளில் 61 ரன்களை குவித்தார். அவரைத் தொடர்ந்து மனிஷ் பாண்டே 34 ரங்கள் எடுத்திருந்தார், ஆனால், இவர்கள் இருவரைத் தவிர மற்ற அனைவரும் சொற்ப ரன்களில் அவுட் ஆகினர். இறுதியாக, ஹைதராபாத் அணி, 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 153 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 10 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்றது. பெங்களுரு அணித்தரப்பில் சாஹல் 3 விக்கெட்டுகளையும், சைனி மற்றும் சிவம் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர்.

Royal Challengers Bangalore Won the match
Sunrisers Hyderabad Scoreboard
Royal Challengers Bangalore Won the match
Royal Challengers Bangalore Scoreboard

தற்போதைய செய்திகள்:-

⮕ ஐபிஎல் தொடரில் கேப்டன் தோனியின் முதல் விக்கெட்!

⮕ தோனி சந்தித்த முதல் பந்தில் அவுட் கொடுத்த அம்பயர்! தோனி ரிவ்யூ சிஸ்டம்

⮕ ‘ரகிட ரகிட ஊ’ ஹர்பஜன்சிங்கின் ட்ரேட்மார்க் பாராட்டு

⮕ மாற்றுத்திறனாளியாக நடிக்கவுள்ளார் நடிகை சமந்தா!

⮕ அனுஷ்காவின் ‘நிசப்தம்’ திரைப்படம் OTT-ல் வெளியீடு

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…