13-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 3-வது போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது, இப்போட்டியில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.


இதையடுத்து களமிறங்கிய பெங்களுரு அணியின் துவக்க வீரர்களாக ஆரோன் பின்ச் மற்றும் தேவ்தத் படிக்கல் களமிறங்கினர். 20 ஓவர் முடிவில் பெங்களுரு அணி 9 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்களை குவித்துள்ளது. பெங்களுரு அணியில் அதிகபட்சமாக தேவ்தத் படிக்கல் 56 ரன்களும், டிவில்லியர்ஸ் 51 ரன்களும் எடுத்துள்ளனர். ஹைதரபாத் தரப்பில் நடராசன், விஜய் ஷங்கர் மற்றும் அபிஷேக் ஷர்மா ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். இதன்மூலம் ஹைதரபாத் அணிக்கு 164 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Royal Challengers Bangalore vs Sunrisers Hyderabad Scoreboard:




தற்போதைய செய்திகள்:- ⮕ ஐபிஎல் தொடரில் கேப்டன் தோனியின் முதல் விக்கெட்! ⮕ தோனி சந்தித்த முதல் பந்தில் அவுட் கொடுத்த அம்பயர்! தோனி ரிவ்யூ சிஸ்டம் ⮕ ‘ரகிட ரகிட ஊ’ ஹர்பஜன்சிங்கின் ட்ரேட்மார்க் பாராட்டு |
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...