‘ராக்கி’ திரைப்பட விமர்சனம் | Rocky Tamil Movie 2021 Review

0
Rocky Tamil Movie 2021 Review and Rating
Rocky Tamil Movie 2021 Review and Rating

‘ராக்கி’ திரைப்பட விமர்சனம்

படக்குழு:

நடிகர்கள்: வசந்த் ரவி, பாரதிராஜா, ரவீனா ரவி, ரோகினி மற்றும் பலர்.

இசை: தர்புகா சிவா

ஒளிப்பதிவு: ஸ்ரேயாஸ் கிருஷ்ணா

எடிட்டிங்: நாகூரான்

தயாரிப்பு: RA ஸ்டுடியோஸ் & ரவுடி பிக்சர்ஸ்

இயக்கம்: அருண் மாதேஸ்வரன்.

Rocky Tamil Movie 2021 Review and RatingRocky Tamil Movie 2021 Review and Rating
Rocky Tamil Movie 2021 Review and Rating

கதைச்சுருக்கம்:

நாயகன் ராக்கியின் அப்பா, கேங்க்ஸ்டராக இருக்கும் பாரதிராஜாவுடன் இணைந்து ரவுடித் தொழில் செய்து வருகிறார். அப்பாவிற்கு பிறகு அந்த இடத்திற்கு வரும் நாயகனுக்கும், பாரதிராஜாவின் மகனுக்கும் இடையே பிரச்சனை எழுகிறது. இது ஒருக்கட்டத்தில் கொலையில் முடிகிறது, ஆம் நாயகனின் அம்மாவை பாரதிராஜாவின் மகன் கொல்ல, பதிலுக்கு அவனை நாயகன் ராக்கி கொன்றுவிடுகிறார். இதனால் உச்சக் கட்டத்திற்கு செல்கிறது பகை, தன் மகனை கொன்று விட்ட நாயகன் மீது கொலைவெறி கொள்கிறார் பாரதிராஜா. இதற்கிடையே கொலை குற்றத்திற்காக சிறை செல்லும் நாயகன் ராக்கி, திரும்ப வந்து தனது துலைந்துபோன தங்கையை தேட ஆரமிக்கிறார்! இறுதியாக தங்கை கிடைத்தாரா? பாரதிராஜா பழிக்குப் பலி என்ன செய்தார்? என்கிற சுவாரஸ்யமே மீதிக் கதை.

Rocky Tamil Movie 2021 Review and Rating
Rocky Tamil Movie 2021 Review and Rating

FC விமர்சனம்:

அறிமுக இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தின் டீசர், டிரைலரே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது. அந்த எதிர்ப்பார்ப்பை முழுப்படம் பூர்த்தி செய்ததா? வாருங்கள் பார்ப்போம். முதலில் நடிகர்கள் ‘தரமணி’ படத்திற்கு பிறகு வசந்த் ரவிக்கு கிடைத்துள்ள மிக நேர்த்தியான கதாப்பாத்திரம் இது என்று சொல்லலாம், அந்தளவிற்கு ஆழமான கதாப்பாத்திரம் அதை மிகவும் உணர்ந்து நடித்துள்ளார். அதேபோல், அவருக்கு சற்றும் சளைக்காத பாத்திரத்தில் வரும் பாரதிராஜா மிரட்டியுள்ளார். இவர்களை தவிர ரவீனா ரவி உள்ளிட்ட அனைவரும் கொடுத்த பாத்திரத்தை நேர்த்தியாகவே செய்துள்ளனர். 

ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு டாப் கிளாஸ், அந்தளவு லைட்டிங், ஆங்கிள் அனைத்தும் படத்தின் கதைக்கு ஏற்றாற்போல் மிரட்டலாகவே அமைந்துள்ளது. அதேபோல் நாகூரானின் எடிட்டிங் படத்திற்கு புதுமை சேர்த்துள்ளது. மேலும், படத்தின் சவுண்ட் எஃப்க்ட்ஸ் பெரிய பலமாக அமைந்துள்ளது. அதேபோல் சண்டைக் காட்சிகள் உலகத்தரம், பாராட்டுக்கள் தினேஷ் சுப்பராயன்… பழிக்குப்பழி என்கிற சாதாரண கதைக்களம் தான் என்றாலும் அதை காட்சி மாற்றத்தின் மூலம் புதுமையாக கொடுத்துள்ளார் இயக்குனர் அருண் மாதேஸ்வரன்.

Rocky Tamil Movie 2021 Review and Rating
Rocky Tamil Movie 2021 Review and Rating

படத்தின் குறையாக தெரிவது, இவ்வளவு நிறைகள் இருந்தாலும் இப்படத்தில் வரும் ஒவ்வொரு காட்சியின் நீளம் நமக்கு ஒருக்கட்டத்தில் சலிப்பை ஏற்படுத்துகிறது. அந்தளவிற்கு காட்சிகளை நீட்டியுள்ளனர், படம் பாருங்கள் உங்களுக்கே தெரியும். இதுவே பெரிய குறையாக தெரிகிறது, படத்தின் சுவாரஸ்யத்தை பெரிதும் பாதித்துள்ளது. இறுதியாக படம் எப்படி? என்றால் உலகப் படங்கள் விரும்பி பார்ப்பவர்களுக்கு இப்படம் ஒரு புதிய அனுபவமாக இருக்கலாம், ஆனால் வெகுஜன மக்களுக்கு இப்படம் எந்த வகையில் போய் சேரும் என்பது பெரிய கேள்விக்குறி?

* ரத்தம் தெறிக்கக்கூடிய, குடலை உருவக்கூடிய காட்சிகள் அதிகம் என்பதால் குழந்தைகளுக்கு இப்படம் ஏற்றதல்ல…  

( பாராட்டுக்கள் ஒளிப்பதிவு, எடிட்டிங், சண்டைக்காட்சிகள், சவுண்ட் எஃபெக்ட்ஸ்)

  Rocky Movie FC Rating 3 /5  

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here