‘பாட்ஷா’ தெலுங்கு படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ரீது வர்மா, இதைத் தொடர்ந்து சில படங்களில் நடித்திருந்தாலும் ‘பெல்லி சுப்புலு’ படம்தான் இவரது திரைப்பயணத்தில் திருப்புமுனையாக அமைந்தது.


இதைதொடர்ந்து தமிழில் வேலையில்லா பட்டதாரி 2 -ஆம் பாகத்தில் சிறிய பாத்திரத்தில் அறிமுகமாகி, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானார். இப்படத்திற்கு முன்பே கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ‘துருவ நட்சத்திரம்’ படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ரீது வர்மா சமீபத்தில் தெலுங்கு ஊடகம் ஒன்றிற்கு சமூகவலைதளம் வாயிலாக பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் திருமணம் எப்போது என கேட்கப்பட்டது. அதற்கு அவர், நான் எப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என எனது பெற்றோர் ஆவலாக காத்திருக்கிறார்கள். ஆனால் நான் அவர்களிடம் இப்போதைக்கு திருமணம் செய்யப் போவதில்லை என தெளிவாக சொல்லிவிட்டேன். எனக்கு ஏற்றவரை எப்போது பார்க்கிறேனோ அப்போது தான் திருமணம். அது நிச்சயம் காதல் திருமணமாக தான் இருக்கும், என பதிலளித்துள்ளார்.
———————– மேலும் உங்கள் பார்வைக்கு ————————-
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘பெண்குயின்’ வரும் ஜூன் 19 முதல் அமேசான் பிரைமில்
👉 கருப்பு புடவையில் ரசிகர்களை கவர்ந்த அனசுயா பரத்வாஜ்!
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...