குறுவை சாகுபடி விவசாயிகளுக்கு நிவாரணம்! முதல்வர் ஆலோசனை?
தமிழ்நாடு, வழக்கமாக ஜூலை மாதத்தில் படிப்படியாகத் திறந்து விடப்படும். நீரின் அளவு 16,000 கனஅடியாக உயர்த்தி, ஆகஸ்ட் மாதத்தில் 18,000 கனஅடியாக தேவைக்கேற்ப மற்றும் மழையின் அளவுக்கேற்ப வழங்கப்படும். ஆனால் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு வெறும் பத்தாயிரம் கன அடி தான். இதைத் தொடர்ந்து இதன் விளைவாக டெல்டா மாவட்டங்களில் ஆற்றங்கரை ஓரமுள்ள பாசன பரப்புகள் மற்றும் தண்ணீர் திறந்து விடப்பட்ட கால்வாய்களின் ஓரங்களில் உள்ள பாசன பரப்புகள் தவிர மற்ற இடங்களில் உள்ள குறுவை சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் தண்ணீர் இன்றி கருகியதால், இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வேளாண் அதிகாரிகள் தலைமைச் செயலகத்தில் இன்று ஆலோசனை மேற்கொள்கின்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் குறுவை சாகுபடி தண்ணீர் இன்றி கருகியதால் குறுவைப் பயிர்களுக்கு ஏற்பட்ட சேதம் குறித்தும், விவசாயிகளுக்கு நிவாரணம் அளிப்பது குறித்தும், இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. டெல்டா மாவட்டத்தில் குருவை சாகுபடி பாதிப்புக்காக வழங்க வேண்டிய நிவாரண தொகை குறித்தும் குழு ஆய்வு மேற்கொண்டுள்ள நிலையில் அதன் அடிப்படையில் முடிவெடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…
எங்களது YOUTUBE சேனலை காண