தயாரித்துள்ள ரவீந்தர் சந்திரசேகர் மோசடி வழக்கில் கைது:
தமிழில் ஒரீரு படங்கள் தயாரித்துள்ள ரவீந்தர் சந்திரசேகர், யூடுயூப் சேனல்கள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இதைத் தொடர்ந்து சீரியல் நடிகை மஹாலக்ஷ்மியை கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இதன்மூலம் கொஞ்ச காலம் வைரல் நாயகனாக இணையத்தில் உலா வந்தார்.
இந்நிலையில் தற்போது திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றும் ஒரு ப்ராஜெக்ட்டில் முதலீடு செய்தால் அதிக பணம் தருவதாக 16 கோடி ருபாய் அளவுக்கு ஏமாற்றி இருப்பதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, போலீசார் அவரை கைது செய்திருக்கின்றனர். இந்த செய்தி திரையுலகில் லேசான பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…
எங்களது YOUTUBE சேனலை காண