‘ரத்தம்’ திரைப்பட விமர்சனம் | Raththam Movie Review & Rating

0
Raththam Movie Review & Rating
Raththam Movie Review & Rating

‘ரத்தம்’ திரைப்பட விமர்சனம் | Raththam Movie Review & Rating

படக்குழு:

நடிகர்கள்: விஜய் ஆண்டனி, நந்திதா ஸ்வேதா, மகிமா நம்பியார், ரம்யா நம்பீசன் மற்றும் பலர்.

இசை: கண்ணன் நாராயணன்

ஒளிப்பதிவு: கோபி அமர்நாத்

எடிட்டிங்: T.S.சுரேஷ்

தயாரிப்பு: INFINITI FILM VENTURES

இயக்கம்: C.S.அமுதன்.

Raththam Movie Review & Rating

கதைச்சுருக்கம்:

படத்தின் துவக்கமே ஒரு பத்திரிக்கை அலுவலகத்தில் கொலை ஒன்று நடக்கிறது. ஆனால் கொலையாளி எங்கும் தப்பிக்காமல் இருக்க, போலீஸ் அந்த கொலையாளியை கைது செய்து அழைத்து செல்கிறது. மறுபுறம் அதே பத்திரிக்கையில் கிரைம் பத்திரிக்கையாளராக இருந்த நாயகன் விஜய் ஆண்டனி தனது மனைவி இறந்த துக்கத்தில் வாழ்கையையே வெறுத்து, தனது மகளுடன் வெளியூர் சென்று வாழ்ந்துக் கொண்டிருக்கிறார். ஒருவழியாக மீண்டும் பத்திரிக்கை பணியில் சேரும் விஜய் ஆண்டனி இந்த கொலை வழக்கை விசாரிக்க ஆரமிக்கிறார். இறுதியாக யார் அந்த கொலையாளி? இதனால் விஜய் ஆண்டனி சந்திக்கும் பிரச்சனைகள் என்ன? என்பதே இப்படத்தின் கதைச்சுருக்கம்.

FC விமர்சனம்:

தமிழ் படம் 1 & 2 படங்களை இயக்கிய C.S.அமுதன் இயக்கத்தில் இன்று(அக்.6) வெளியான ரத்தம் படம் எப்படி இருக்கு? வாருங்கள் விமர்சனத்திற்குள் சென்று பார்ப்போம். நடிகர்களை பொறுத்தவரை விஜய் ஆண்டனி அதே வழக்கமான நடிப்பு தான் பெரிய மாற்றமில்லை, ஆனால் பெரிய குறையுமில்லை. அதேபோல நந்திதா ஸ்வேதா, மகிமா நம்பியார் இருவரும் கொடுத்த கதாப்பாத்திரத்தை நீட்டாகவே செய்து கொடுத்துள்ளனர். அதிலும் மகிமா நம்பியார் நிறைய ஸ்கோர் செய்துள்ளார்.

கிரைம் திரில்லர் படங்கள் உலகமுழுவதும் நிறைய வந்துள்ளது. நாமும் நிறையவே பார்த்து சலித்திருக்கிறோம் ஆனால் அதிலிருந்து வேறுபடுத்த இப்படத்தில் ஹேட் கிரைம்ஸ் என்கிற விஷயத்தை உள்புகுத்தி எப்படி கொலைகள் திட்டமிடப்படுகிறது? இதற்கு பின்னணியில் இருப்பது யார்? என்கிற சுவாரஸ்யத்தை வித்தியாசமாக காட்ட படக்குழு முயற்சி செய்துள்ளது. அது சில இடங்களில் வொர்க் அவுட் ஆகியுள்ளது. ஆனால் என்ன தான் வித்தியாசமாக முயற்சி செய்தாலும், திரைக்கதையிலும், அதை சொல்லப்பட்ட விதத்திலும் பெரிய சுவாரஸ்யமில்லை என்றால் ரசிகர்களை ஈர்ப்பது கஷ்டம்தான். அந்த வகையில் படத்தின் வில்லனுக்கு அழுத்தமான கதாபாத்திர வடிவமைப்பு இல்லாததும், விஜய் ஆண்டனியின் பிளாஸ்பேக் உள்ளிட்ட சில படத்திற்கு தேவையில்லாத காட்சிகள் நம்மை சலிப்படைய செய்து, அடுத்து என்ன நடக்க போகிறது என்பது குறித்த எந்தவொரு ஆர்வத்தையும் நம்மிடத்தில் ஏற்படுத்தவில்லை. இதுவே படத்திற்கு பெரிய குறையாக மாறியுள்ளது. மொத்தமாக பார்த்தால் இப்படம் ரொம்பவே சுமார் ரகம்தாங்க…

“Raththam” – Below Average

Adult Waring: கொலை சம்வங்கள் மட்டும் இருக்கிறது.

Raththam Movie Film Crazy Rating: 2 /5

 

தவறவிடாதீர்!

லியோ திரைப்படத்தின் ட்ரைலர் ரிலீஸ்! ரசிகர்கள் கொண்டாட்டம்

‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு இன்று துவக்கம்!

‘தளபதி 68’ எந்த மாதிரியான திரைப்படம்? அர்ச்சன்னா கல்பாத்தி பகிர்ந்த மாஸ் அப்டேட்

‘தளபதி 68’ படத்தின் படப்பிடிப்பு எப்போது துவங்கும்? வெளியான அப்டேட் இதோ

 

சுவாரஸ்யமான உடனடி சினிமா செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

எங்களது YOUTUBE சேனலை காண

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @filmcrazymedia
ட்விட்டரில் @filmcrazymedia
இன்ஸ்டாகிராமில் @filmcrazymedia
வாட்ஸ்அப் சேனலில் @filmcrazymedia என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0