சாய் பல்லவி நடித்தால் நான் விலகி கொள்கிறேன் ராஷ்மிகா!

0
Rashmika Refuses Film With Nani Because Of Sai Pallavi

தென்னிந்திய சினிமாவை பொறுத்தவரை சாய் பல்லவி, ராஷ்மிகா மந்தனா இருவருமே தங்களுக்கென தனித்துவ இடத்தைப் பிடித்துள்ளனர். இப்படியிருக்கையில் இருவரையும் ஒன்று சேர்க்க பார்த்த தெலுங்கு படநிறுவனத்திற்கு கிடைத்த பதில் தான் தற்போதைய பரபரப்பு செய்தி.  

Rashmika Refuses Film With Nani Because Of Sai Pallavi
Sai Pallavi

‘டாக்சிவாலா’ படத்தை இயக்கிய ராகுல் சங்க்ரித்யான் இயக்கத்தில், நாக வம்சியின் சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவன தயாரிப்பில் நானி நடிக்கவிருக்கும் படம் ஷ்யாம் சிங்க ராய். ஜெர்சி படத்தை அடுத்து இரண்டாவது முறையாக சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்திருக்கிறார் நானி. இப்படத்தில் இரு கதாநாயகிகளாம், அதனால் சாய் பல்லவி மற்றும் ராஷ்மிகாவை நடிக்க வைத்தால் நன்றாக இருக்குமென அவர்களிடம் இதுக்குறித்து அணுகியுள்ளனர். முதலில் சாய் பல்லவியை அணுக அவர் ஓகே சொல்லி விட்டாராம். ற்றொரு ஹீரோயினாக நடிக்க ரஷ்மிகா மந்தனாவை அணுகினார்களாம். ஆனால் சாய் பல்லவி நடிப்பது தெரிந்தவுடன் ரஷ்மிகா மந்தனா இப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Rashmika Refuses Film With Nani Because Of Sai Pallavi
Rashmika

சாய் பல்லவி ஒரு படத்தில் நடித்தால் தன் நடிப்புத் திறமையால் ரசிகர்களை கவர்ந்துவிடுவார். இந்நிலையில் அவர் நடிக்கும் படத்தில் தானும் நடித்தால் தன்னை யாரும் கவனிக்க மாட்டார்கள் என்று ரஷ்மிகா கருதுவதாக கூறப்படுகிறது. இத்தனைக்கும் பெரிய தொகையை சம்பளமாக தருகிறோம் என்று கூறியும் கூட ரஷ்மிகா நடிக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. 

 

———————– மேலும் உங்கள் பார்வைக்கு ————————-

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘பெண்குயின்’ வரும் ஜூன் 19 முதல் அமேசான் பிரைமில்  

 

 

👉 ஜோதிகா, கீர்த்தி சுரேஷை தொடர்ந்து OTT -ல் வெளியாகும் வரலக்ஷ்மியின் திரைப்படம்!

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…