கீர்த்தி சுரேஷை புகழ்ந்து தள்ளிய ராஷ்மிகா மந்தனா!

0
Rashmika Praised Keerthy Suresh

கன்னட திரையுலகில் அறிமுகமாகி தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகை என்ற அளவிற்கு வளர்ந்துள்ளார் நடிகை ராஷ்மிகா மந்தனா.

Rashmika Praised Keerthy Suresh
Rashmika Mandanna

தெலுங்கில் மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன் என முன்னணி நடிகர்களுடன் தற்போது ஜோடி சேர துவங்கியுள்ளார்,  தமிழில் கார்த்தி ஜோடியாக சுல்தான் என்கிற படத்தின் நடித்துள்ளார். இது ஒருபுறம் இருக்க, சினிமாவில் நடிகர்களை பொறுத்தவரை சக நடிகரையோ, அவர்கள் நடித்த படங்களையோ தானாக முன்வந்து பாராட்டுவது என்பது அறிய ஒன்று. அந்த அறிய ஒரு நிகழ்வு ராஷ்மிகாவின் லேட்டஸ்ட் பதிவு, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் அமேசான் பிரைமில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘பெண்குயின்’. இப்படத்தை பார்த்துவிட்டு இப்படத்தையும், கீர்த்தி சுரேஷையும் புகழ்ந்துள்ளார் ராஷ்மிகா. அவர் கூறியுள்ளதாவது, “நேற்றிரவு பெண்குயின் படம் பார்த்தேன், கீர்த்தி சுரேஷ் வழக்கம்போல் அற்புதமான நடிப்பு. குடும்பத்தை பாதுகாக்கும் அந்த ஒரு விஷயம் அழகாக உள்ளது. அனைத்து அம்மாக்களுக்கும் இது பொருந்தும், படக்குழுவினர் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்” கூறியுள்ளார்.  

Insta Feed:

 

———————– மேலும் உங்கள் பார்வைக்கு ————————-

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘பெண்குயின்’ வரும் ஜூன் 19 முதல் அமேசான் பிரைமில்  

 

 

👉 கருப்பு புடவையில் ரசிகர்களை கவர்ந்த அனசுயா பரத்வாஜ்!

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…