தளபதி விஜய் தற்போது மாஸ்டர் படத்தின் வெளியீட்டை எதிர்நோக்கி காத்துள்ளார், கொரோனா ஊரடங்கால் திரையரங்குகள் எப்போது திறக்கும் என்பது தெரியாததால் படங்கள் வெளியாகாமல் உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள மாஸ்டர் திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாகலாம் என கூறப்படுகிறது.


இப்படத்தை அடுத்து விஜய் நடிக்கவுள்ள ‘தளபதி 65 படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ளார் என்பது கிட்டத்தட்ட உறுதியான தகவல். இது விஜய் – முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் 4 -வது திரைப்படம், இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ள நிலையில், தளபதி 65 படத்தின் நடிகர்கள், டெக்னீஷியன்கள் குறித்த தகவல்கள் கசிந்து வருகிறது. தெலுங்கில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் தமன் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளதாக அண்மையில் செய்திகள் வந்தன. தற்போது இப்படத்திற்கு கதாநாயகியாகமுதலில் பூஜா ஹெக்டே இருக்ககூடும் என கூறப்பட்ட நிலையில், தற்போது ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அடுத்த ஆண்டு தீபாவளி வெளியீடாக இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர்.


———————– மேலும் உங்கள் பார்வைக்கு ————————-
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘பெண்குயின்’ வரும் ஜூன் 19 முதல் அமேசான் பிரைமில்
👉 ‘சுஷாந்த் மரணத்திற்கு இது தான் காரணம்’ கங்கனா ரனாவத் குற்றச்சாட்டு
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...