கன்னட சினிமாவில் அறிமுகமாகி தற்போது தெலுங்கில் முன்னணி நடிகை என்ற நிலைக்கு உயர்ந்திருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா.


மகேஷ் பாபுவுடன் ‘சரிலேறு நீகேவ்வறு’ மற்றும் நிதினுடன் ‘பீஷ்மா’ ஆகிய படங்கள் ராஷ்மிகாவின் சமீபத்திய வெற்றி. இதைதொடர்ந்து தமிழில் கார்த்தியுடன் சுல்தான், தெலுங்கில் அல்லு அர்ஜுனுடன் புஷ்பா மற்றும் ஒரு கன்னடம் படத்தில் நடித்து வருகிறார். Fathers Day -வை முன்னிட்டு ராஷ்மிகா தனது உருக்கமான பதிவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது, ” நான் பிறப்பதற்கு இரண்டு நாட்கள் முன்பு ஏன் அப்பாவின் கனவில் நான் நீண்ட முடி, பெரிய கண்கள், நீளமான மூக்கு ஆகியவற்றோடு இருந்ததாகவும், அவரது வயிற்றில் ஆடி விளையாடி கொண்டிருந்ததாகவும் கூறி இருக்கிறார். சிறுவயது துவங்கி நான் அப்பாவுடன் இருந்ததில்லை, காரணம் அவர் பிசினஸ் என்று வெளியில் இருப்பார், நான் பெரும்பாலும் ஹாஸ்டலில் இருப்பேன். ஆனால் எனது தற்போதைய நிலை வரை ஏன் அப்பா தான் பில்லராக இருந்துள்ளார்.


இதை உங்களுடன் பகிர காரணம் பலரும் தங்கள் அப்பாவுடன் நேரம் செலவழிக்க முடியவில்லை, நமக்கும் அப்பாக்களுக்கும் இடையே ஒரு இடைவெளி எப்போதும் இருக்கும் என்று. ஆனால் உண்மை என்னவென்றால் அவர்கள் மனதில் என்ன ஓடிக் கொண்டிருக்கிறது என உங்களுக்கு தெரிந்தால் அவர்கள் வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய பில்லராக நீங்கள் இருப்பீர்கள். அவர்கள் நமக்காகவே எப்போதும் வேலை வேலை என்று இருப்பவர்கள். சில விஷயங்களில் கண்டிப்பாக இருப்பார்கள், நமக்கு சிறந்தது தான் கிடைக்க வேண்டும் என அவர்கள் விரும்புவார்கள். அவர்கள் எமோஷன்களை அதிக அளவில் காட்ட மாட்டார்கள். ஏனென்றால் இந்த சமுதாயம் ஆண்களிடம் ஒன்றை சொல்லி வைத்திருக்கிறது. பலவீனமானவர்கள் தான் எமோஷன்களை வெளியில் காட்டுவார்கள் என்ற அற்புதத்தை. அம்மாக்களுக்கு இணையாக அப்பாக்களும் ம குழந்தைகள் மீது அன்பு செலுத்த முடியுமா? ஆம் முடியும்” என தனது தந்தை மீதான அன்பை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
Insta Feed:
———————– மேலும் உங்கள் பார்வைக்கு ————————-
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘பெண்குயின்’ வரும் ஜூன் 19 முதல் அமேசான் பிரைமில்
👉 ‘சுஷாந்த் மரணத்திற்கு இது தான் காரணம்’ கங்கனா ரனாவத் குற்றச்சாட்டு
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...