கன்னடத்தில் துவங்கி தற்போது தென்னிந்தியா முழுவதும் பிரபலமாகி, தெலுங்கில் முன்னணி நடிகையாக மாறியிருக்கும் நடிகை ரஷ்மிகா மந்தனா.


சமீபத்தில் மகேஷ் பாபுவுடன் ‘சரிலேறு நீக்கெவ்வரு‘ மற்றும் பீஷ்மா ஆகிய தெலுங்கு படங்கள் வெற்றிப்படங்களாக அமைய தெலுங்கில் தற்போது பிஸியாகிவிட்டார் ரஷ்மிகா. இந்நிலையில் பாதுகாப்பற்ற தன்மை குறித்த பதிவு ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் கூறியுள்ளதாவது, “Insecurities! – இதுபற்றி googleல் தேடினால் ஒரு விஷயம் பற்றி நிச்சயமின்மை மற்றும் அதிக ஏக்கத்துடன் இருப்பது என்று தான் காட்டுகிறது. ஆனால் அது மனிதனாக இருப்பது என்று நான் கூறுவேன். நாம் பல விஷயங்கள் குறித்து பாதுகாப்பற்ற நிலையில் இருக்கிறோம். உண்மையை சொல்ல வேண்டும் என்றால், இந்த கொரோனா லாக் டவுனில் நான் பாதுகாப்பற்ற தன்மையை அதிகம் உணர்கிறேன். என வேலை, என் இதயம், என் தோற்றம், என் மன ஆரோக்கியம்.. இப்படி அனைத்தையும் பற்றித்தான். ஆனால் இது எதுவும் நம் கையில் இல்லை என்பதை உணர்தேன். அதனால் நம்மால் கட்டுப்படுத்தக் கூடிய விஷயங்களை பற்றி மட்டும் கவலை படுவோம்” என விரிவான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.


செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...