விஜய்க்கு ஜோடியாகும் ராஷ்மிகா! அதிகாரப்பூர்வ அறிவிப்பு

0
Rashmika Mandanna Joins Thalapathy 66
Rashmika Mandanna Joins Thalapathy 66

விஜய்க்கு ஜோடியாகும் ராஷ்மிகா! அதிகாரப்பூர்வ அறிவிப்பு: பீஸ்ட் படத்தை அடுத்து விஜய்யின் 66-வது படத்தை பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கவுள்ளார். தமிழ் தெலுங்கு இருமொழிகளில் உருவாகும் இப்படத்தை தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன் தயாரிக்கிறது. இது அவர்களின் முதல் நேரடி தமிழ் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தமன் இசையமைக்கவுள்ள இப்படத்தில் யார் கதாநாயகி என்கிற குழப்பம் ரசிகர்கள் மத்தியில் நிலவி வந்தது. கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகா, தமன்னா, பாலிவு நடிகைகள் கிருத்தி சனோன், திஷா படானி என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பெயர் அடிபட்டது. இந்நிலையில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, நடிகை ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக ‘தளபதி 66’ படத்தில் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இன்று ராஷ்மிகாவின் பிறந்தநாள் என்பதால் சிறப்பு பரிசாக படக்குழு இந்த அப்டேட்டை வெளியிட்டுள்ளது. நாளை இப்படத்தின் துவங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Rashmika Mandanna Joins Thalapathy 66
Rashmika Mandanna Joins Thalapathy 66

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்