சரித்திர ராணியாக ராஷ்மிகா மந்தனா! புதுப்பட தகவல்: தெலுங்கு, தமிழ் ஹிந்தி என பிசியாக நடித்து வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது அல்லு அர்ஜுனுடன் புஷ்பா 2, ரெயின்போ உள்ளிட்ட தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.


இந்நிலையில், ஹிந்தியில் மராட்டிய மன்னன் சத்ரபதி சிவாஜியின் மூத்த மகன் சம்பாஜி போம்ஸ்லே வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட உள்ளது. இப்படத்தில் சம்பாஜி போம்ஸ்லேவாக விக்கி கவுசல் நடிக்கவுள்ளார், மேலும் அவரது மனைவியான இயேசுபாய் கதாப்பாத்திரத்தில் ராஷ்மிகா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. லட்சுமன் உட்டேகர் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…