ரன்பீர் கபூருடன் ஜோடி சேரும் ராஷ்மிகா! வெளியான தகவல்

0
Rashmika joins the cast of Sandeep Reddy Vanga’s Animal
Rashmika joins the cast of Sandeep Reddy Vanga’s Animal

ரன்பீர் கபூருடன் ராஷ்மிகா ஜோடி சேரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்னிந்தியா சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் ராஷ்மிகா மந்தனா. தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பிஸியாக நடித்து வரும் ராஷ்மிகாவின் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

‘அர்ஜுன் ரெட்டி’ படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி இயக்கம் அடுத்த படத்தில் பாலிவுட் முன்னணி நடிகர் ரன்பீர் கபூர் நடிக்கவுள்ளார். அனில் கபூர், பாபி தியோல் முக்கிய பாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தில் தற்போது ராஷ்மிகா கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார். இதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கன்னட சினிமாவில் அறிமுகமாகிய ராஷ்மிகா தற்போது தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு வருகிறார். இவர் நடிப்பில் தெலுங்கில் சமீபத்தில் வெளியான ‘புஷ்பா’ படம் பெரும் ஹிட்டடிக்க விரைவில் இரண்டாம் பாகம் வெளிவரவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Rashmika joins the cast of Sandeep Reddy Vanga’s Animal
Rashmika joins the cast of Sandeep Reddy Vanga’s Animal

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்