“இந்த உலகில் என்னதான் நடக்கிறது” – மணிப்பூர் வன்முறை குறித்து ராஷ்மிகா
மணிப்பூரில் 2 பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு கும்பலாக பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த இந்தியா முழுவதும் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து பலரும் தங்களது கண்டனங்களை கூறி வருகின்றனர். அந்த வகையில் நடிகை ராஷ்மிகா மந்தனா தனது ஆதங்கத்தை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


அவர் கூறியுள்ளதாவது, “இந்த உலகில் என்னதான் நடந்துகொண்டிருக்கிறது. படித்ததை என்னால் நம்ப முடியவில்லை. அது என் மனதை குலைத்து உள்ளது. சொல்வதற்கே வருத்தமாக இருக்கிறது. நான் பாதிக்கப்பட்ட பெண்களின் பக்கம் உளப்பூர்வமாக நிற்கிறேன். குற்றவாளிகளை தண்டிப்பார்கள் என்று நம்புகிறேன்” என பகிர்ந்துள்ளார்.
இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…
எங்களது YOUTUBE சேனலை காண