MX ப்ளேயர் தயாரிப்பில் கௌதம் மேனன் மற்றும் பிரசாத் முருகேசன் இயக்கத்தில் வெளியான வெப் சீரீஸ் ‘குயின்’.
மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எழுதப்பட்ட அனிதா செல்வகுமார் புத்தகத்தை மையப்படுத்தி இந்த தொடர் உருவாக்கப் பட்டுள்ளது. இதில் ஒரு பெண் தனது வாழ்கையில் மூன்று வித காலக்கட்டங்களில் கடக்கும் சம்பவங்கள் இடம்பெறுவதால், சிறுவயது கதாப்பாத்திரத்தில் அனிகா சுரேந்திரன், அதற்கடுத்த காலக்கட்டங்களில் அஞ்சனா ஜெயபிரகாஷ் என்பவரும், மெச்சுரிட்டியான வயதில் ரம்யா கிருஷ்ணனும் நடித்திருந்தனர். குயின் முதல் பாகமாக வெளியான இந்த தொடர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இரண்டாம் பாகம் எப்போது வருமென ரசிகர்கள் எதிர்ப்பார்த்து வருகின்றனர், இந்நிலையில் குயின் இரண்டாம் பாகம் குறித்து ரம்யா கிருஷ்ணன் அப்டேட் ஒன்றை கூறியுள்ளார்.
அவர் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் கூறியதாவது, “இது ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாறு இல்லை, நீங்கள் வேண்டுமானால் நினைத்து கொள்ளுங்கள்.இது அனிதா சிவகுமார் என்பவர் எழுதிய புத்தகத்தின் அடிப்படையில் எடுக்கப்படும் தொடர். ஜெயலலிதாவின் கதையைப் போல இருந்ததால் எனக்கு இந்தத் தொடர் மிகவும் பிடித்தது. கதைப்படி இன்னும் அந்தக் கதாபாத்திரம் முழு அரசியல்வாதி ஆகவில்லை. முதல் சீஸனில் அவர் அந்த நிலை வரை செல்கிறார். இன்னும் சீஸன் 2 படப்பிடிப்பு தொடங்கவில்லை. அதில் பங்கெடுக்க நான் ஆர்வமாக இருக்கிறேன்.
இந்த பாகத்தில் அதிக ஆக்ஷன், பரபரப்பான காட்சிகளை இந்த சீஸனில் மக்கள் எதிர்பார்க்கலாம். தற்போது நிலவும் கரோனா நெருக்கடியால் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்று தெரியவில்லை. கடைசியாக நான் கதாசிரியர் ரேஷ்மாவுடன் பேசியபோது, அவர் திரைக்கதையை முடித்திருந்தார். படப்பிடிப்புக்குச் செல்ல அனைத்தும் தயார். ஆனால் இந்த ஊரடங்கைப் பொறுத்துதான் உள்ளது” என கூறியுள்ளார்.
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் த்ரில்லரான ‘பெண்குயின்’ டீசர்
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...