அயலான் படத்திலிருந்து ரகுல் ப்ரீத் சிங் விலகலா?

0
Rakul Preet Singh Reply to Ayalaan Rumours

‘இன்று நேற்று நாளை’ இயக்குனர் ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் திரைப்படம் அயலான்.

Rakul Preet Singh Reply to Ayalaan Rumours
Ayalaan First Look

R.D. ராஜா தயாரிப்பில் பெரும் பொருட்செலவில் துவங்கப்பட்ட இப்படம், தயாரிப்பு தரப்பில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தில் கதாநாயகியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்து வருகிறார். நீண்ட தாமதத்திற்கு பிறகு கடந்த பிப்ரவரி மாதம் மீண்டும் படத்தின் படப்பிடிப்பு  துவங்கியது. அந்த ஷுட்டிங்கில் ரகுல் ப்ரீத் மார்ச் மாதம் கலந்து கொண்டார். பின் கொரோனா ஆட்டத்தால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Rakul Preet Singh Reply to Ayalaan Rumours
Rakul Preet Singh

இந்த நிலையில் அயலான் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளதாகவும், கொரோனாவை காரணம் காட்டி ஷூட்டிங்கிற்கு ரகுல் ப்ரீத் வரமறுப்பதாகவும் பிரபல இணையதளத்தில் செய்தி வெளியாகியது. மேலும், இவருக்கு பதில் வேற நடிகையை ஒப்பந்தம் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளதாகவும் கூறி கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு தனது ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்துள்ளார் ரகுல் ப்ரீத், அவர் கூறியுள்ளதாவது ” ஊடகங்கள் உண்மை நிலவரத்தை அறிந்து வெளியிட வேண்டும். தயவு செய்து யார் இப்போது ஷூட்டிங் துவங்குகிறார்கள், எங்கு நடத்துகிறார்கள் என சொல்லுங்கள் நான் மீண்டும் நடிக்க காத்துக் கொண்டிருக்கிறேன்” என கூறியுள்ளார்.

Rakul Preet Singh Reply to Ayalaan Rumours
Ayalaan Director Ravikumar

இதுக்குறித்து அயலான் பட இயக்குனர் ரவிக்குமார் “நான் பணியாற்றியதிலேயே ராகுல் ப்ரீத் மிகவும் ப்ரொபஷனல் ஆன நடிகை. இது போன்ற வதந்திகள் மீடியாக்களில் வருவது மிகவும் துரதிஷ்டவசமானது. நாங்கள் தற்போது முழு உத்வேகத்துடன் தான் இருக்கிறோம். சகஜ நிலை திரும்பிய பிறகு மீண்டும் பணிகளை துவங்கி சூட்டிங்கை முடிக்க உள்ளோம்” என கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

 

 

———————– மேலும் உங்கள் பார்வைக்கு ————————-

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘பெண்குயின்’ வரும் ஜூன் 19 முதல் அமேசான் பிரைமில்  

 

 

👉 ஜோதிகா, கீர்த்தி சுரேஷை தொடர்ந்து OTT -ல் வெளியாகும் வரலக்ஷ்மியின் திரைப்படம்!

👉 சாய் பல்லவி நடித்தால் நான் விலகி கொள்கிறேன் ராஷ்மிகா!

👉 புல்லட் ஓட்ட கற்றுக்கொள்ளும் போது தவறி விழுந்த ஷ்ரத்தா ஸ்ரீநாத்!

👉 சுஷாந்த் சிங் நடித்த கடைசி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி!

👉 சமந்தா முத்தமிட்ட நபருக்கு கொரோனா பாதிப்பு? உண்மை நிலவரம்

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…

  

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...