50 சதவிகித சம்பளத்தை குறைத்து கொண்ட ரகுல் ப்ரீத் சிங்!

0
Rakul Preet Singh Reduced 50% of her Salary

கன்னட மொழியில் அறிமுகமாகி தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வலம்வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.

Rakul Preet Singh

தமிழில் தடையற தாக்க படம் மூலம் அறிமுகமான ரகுல் ப்ரீத் சிங், அதன் பிறகு என்னமோ ஏதோ, தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், NGK ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது நிலவி வரும் கொரோனா சூழ்நிலையில் எல்லா தொழில்கள் போலவே திரையுலகமும் முற்றிலும் முடங்கி போயுள்ளது. பாதி முடித்த படங்கள், படவேலைகள் முற்றிலும் முடிவடைந்து ரிலீஸ் தேதியை எதிர்நோக்கி காத்திருக்கும் படங்கள் என தயாரிப்பாளர்கள் கலங்கியுள்ள இந்த நிலையில், விஜய் ஆண்டனி, ஹரிஷ் கல்யாண் உள்ளிட்ட சிலர் (மட்டுமே) தானாக முன்வந்து தங்களது சம்பளத்தை குறிப்பிட்ட சதவிகிதம் குறைத்து கொண்டுள்ளனர்.  

Rakul Preet Singh Reduced 50% of her Salary

அந்த வரிசையில் நடிகை ரகுல் ப்ரீத் சிங், ஒரு படத்தில் நடிக்க ரூ.1.5 கோடி வாங்கி வந்ததாகவும் இனிமேல் ரூ.75 லட்சத்துக்கு நடிக்க முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் தற்போது கமல்ஹாசன் – ஷங்கர் கூட்டணியில் உருவாகிவரும் ‘இந்தியன் 2’ மற்றும் சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

 * புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவிய வரலட்சுமி சரத்குமார்

* மருத்துவமனையில் நடிகர் பொன்னம்பலம் உதவிக்கரம் நீட்டிய கமல்ஹாசன்!

* சிவப்பு உடையில் பளபளக்கும் அழகு! சஞ்சிதா ஷெட்டி லேட்டஸ்ட் படங்கள்

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…

 

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...