தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் பிசியான ஹீரோயினாக வலம்வருகிறார் ரகுல் பிரீத் சிங்.


தமிழில் கடைசியாக சூர்யாவுடன் NGK படத்தில் நடித்திருந்தார், தற்போது ஷங்கர் – கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகிவரும் மெகாபட்ஜெட் படமான ‘இந்தியன் 2’ படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்து வருகிறார். நடிப்பை தவிர்த்து உடற்பயிற்சியே கதி என இருந்து வரும் ரகுல், அடிக்கடி தனது உடற்பயிற்சி அறிவுரைகளையும், கூடவே படங்கள், வீடியோக்களை ஷேர் செய்து வருகிறார். அதுவும் இந்த லாக்டவுனில் சொல்லவா வேணும், இது ஒருபுறம் இருக்க ரகுல் பரீத் சிங்கின் டெல்லி பயணம் ரசிகர்களை வியப்பட செய்துள்ளது. அதற்கான காரணம் அவரின் கவச உடை. கொரோனா பாதிப்பு காரணாமாக நிறுத்தப்பட்டிருந்த உள்நாட்டு விமானசேவை சமீபத்தில் மீண்டும் துவங்கப்பட்டது.
இந்நேரத்தில் தலை முதல் கால் வரை கவர் செய்திருக்கும் பாதுகாப்பு உடை, கையுறை, முகக்கவசம் ஆகியவற்றை அணிந்து கொண்டு மும்பையிலிருந்து டெல்லிக்கு பறந்துள்ளார். இதுக்குறித்த படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. (பாதுகாப்பு முக்கியம்தான். இருந்தாலும், எல்லாரும் இந்த மாதிரி கிளம்பிட்டா எப்படி இருக்கும்…)
வீடியோ:
———————– மேலும் உங்கள் பார்வைக்கு ————————-
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘பெண்குயின்’ வரும் ஜூன் 19 முதல் அமேசான் பிரைமில்
👉 சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘டாக்டர்’ பட பிரத்யேக படங்கள்
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...