‘ஜெயிலர்’ படத்தின் சென்சார் & ரன் டைம் இதோ:
ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.


வரும் ஆகஸ்ட்10ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் சென்சார் பணிகள் முடிவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், படத்தின் மொத்த நீளம் 2 மணி நேரம் 49 நிமிடங்கள் இருக்கும், அதில் முதல் பாதி 1 மணி நேரம் 19 நிமிடங்கள், இரண்டாம் பாதி 1 மணி நேரம் 30 நிமிடங்கள் என கூறப்படுகிறது. வரும் ஜூலை 28ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் ஜெயிலர் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…
எங்களது YOUTUBE சேனலை காண