கொரோனா ஊரடங்கு காரணாமாக கடந்த 6 மாத காலமாக தமிழகம் முழுவதும் சினிமா தியேட்டர்கள், திருமண மண்டபங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டு கிடந்தது. தற்போது குறைந்தபட்ச தளர்வுகள் அவ்வபோது அறிவிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த்தின் ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு ரூ.6.50 லட்சம் சொத்துவரி செலுத்துமாறு சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதைத்தொடர்ந்து, கொரோனா பொதுமுடக்கதால் மூடியேகிடந்த தனது திருமண மண்டபத்துக்கு ரூ.6.5 லட்சம் சொத்துவரி செலுத்த கூறிய நோட்டீசை எதிர்த்து ரஜினிகாந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.


இந்த வழக்கானது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த் தலைமையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி நோட்டீஸ் அனுப்பிய பத்தே நாட்களுக்களில் வழக்கு தொடர்ந்து நீதிமன்ற நேரத்தை வீணடிப்பதாக நீதிபதி கூறியுள்ளார். மேலும், அபராதம் விதித்து வழக்கை தள்ளுபடி செய்யப்போவதாக எச்சரிக்கை விடுக்க, தனது வழக்கை வாபஸ் பெற்றது ரஜினி தரப்பு.
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...