‘சத்தியமா விடவே கூடாது’ ரஜினிகாந்த் கண்டனம்

0
Rajinikanth express his anger on Tuticorin father-son custodial deaths

சாத்தான்குளம் ஜெயராஜ், பெனிக்ஸ் கொடூர மரணத்திற்கு இந்தியா முழுக்கு கண்டன குரல்கள் எழ துவங்கியுள்ளன. அந்த வகையில் திரைத்துறையில் பலரும் தங்களது கண்டனங்களை கூறி வருகின்றனர். இந்நிலையில் மிக பரப்பரப்பான இந்த கொலை வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்தது தமிழக அரசு.

Rajinikanth express his anger on Tuticorin father-son custodial deaths

இந்த விவகாரம் தொடர்பாக ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸுக்கு நீதி கேட்டு தமிழக மக்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்கள். திரையுலக பிரபலங்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த காட்டு மிராண்டித் தனத்தை செய்தவர்களை சும்மாவிடக் கூடாது என்று கோலிவுட் பிரபலங்கள் கூறியுள்ளனர். இதுக்குறித்து நடிகர் ரஜினிகாந்த் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். தான் கோபமாக பார்க்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரஜினிகாந்த் கூறியிருப்பதாவது, “தந்தையையும், மகனையும் சித்ரவதை செய்து மிருகத்தனமாகக் கொன்றதை மனித இனமே எதிர்த்து கண்டித்த பிறகும், காவல் நிலையத்தில் மாஜிஸ்திரேட் எதிரிலேயே சில காவலர்கள் நடந்து கொண்ட முறையும், பேசிய பேச்சும் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தகுந்த தண்டனை கண்டிப்பாக கிடைத்தே ஆக வேண்டும். விடக் கூடாது. #சத்தியமா_விடவே_கூடாது” என்று தெரிவித்துள்ளார். 

 

———————– மேலும் உங்கள் பார்வைக்கு ————————-

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘பெண்குயின்’ வரும் ஜூன் 19 முதல் அமேசான் பிரைமில்  

 

👉 விஷால் நடிப்பில் ‘சக்ரா’ திரைப்படத்தின் டிரைலர் வீடியோ

👉 ‘இது மரணம் இல்லை கொலை’ திரைத்துறை வட்டாரத்தில் குவியும் கண்டனங்கள்

👉 சாய் பல்லவி நடித்தால் நான் விலகி கொள்கிறேன் ராஷ்மிகா!

👉 புல்லட் ஓட்ட கற்றுக்கொள்ளும் போது தவறி விழுந்த ஷ்ரத்தா ஸ்ரீநாத்!

👉 சுஷாந்த் சிங் நடித்த கடைசி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி!

👉 சமந்தா முத்தமிட்ட நபருக்கு கொரோனா பாதிப்பு? உண்மை நிலவரம்

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…

 

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...