13-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 9-வது லீக் போட்டி ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றுவருகிறது, இப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் விளையாடி வருகிறது. டாஸ் வென்றுள்ள ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது, இதனால் முதலில் பேட்டிங்கை துவங்கிய பஞ்சாப் அணியின் துவக்க ஆட்டக்காரர்களான ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் கூட்டணி விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் ரன்களை குவித்தனர். இதில் ஐபிஎல் சீசனில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார் மயங்க் அகர்வால். இறுதியாக, பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 223 ரன்களை குவித்துள்ளது. மயங்க் அகர்வால் 106 ரன்களும், KL ராகுல் 69 ரன்கள் எடுத்திருந்தனர். இதன்மூலம் 224 என்ற இலக்கை ராஜஸ்தானுக்கு நிர்ணயித்துள்ளது பஞ்சாப்.


செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...