13-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 12-வது போட்டியில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது, இதனால் முதலில் பேட்டிங் துவங்கிய கொல்கத்தா அணியில் துவக்க வீரரான சுப்மன் கில் அதிரடியாக ஆடி 47 ரன்களை குவித்தார், அடுத்து இயான் மார்கன் 34 ரன்கள் எடுத்திருந்தார்.


இவர்களை தவிர மற்ற பேட்டிங் செய்த அனைவரும் சொற்ப ரன்களுடன் ஆட்டமிழந்தனர். இறுதியாக , 20 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 6 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்களை எடுத்துள்ளது. ராஜஸ்தான் அணியில் ஜோசப் ஆர்ச்சர் 18 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இதன்மூலம் ராஜஸ்தான் அணிக்கு 175 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...