கோலாகலமாக நடைபெற்று வரும் ராஜ ராஜ சோழனின் 1035-வது சதய விழா

0
Raja raja cholan sathya vizha 2020

தஞ்சை பெரியகோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் மாமன்னன் ராஜராஜ சோழனின் சதயவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக சதயவிழா நடைபெறுமா? என கேள்வி எழுந்த நிலையில் சதயவிழாவை ஒருநாள் மட்டும் நடத்த முடிவு செய்யப்பட்டது. ந்நிலையில் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1035-வது ஆண்டு சதயவிழா இன்று நடைபெறுகிறது. தஞ்சை மாமன்னன் ராஜராஜ சோழனின் 1035-வது சதயவிழாவையொட்டி அவரது சிலைக்கு கலெக்டர் கோவிந்தராவ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். விழா தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும், சதய விழாவில் கொரோனா தொற்று நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என்று கலெக்டர் கோவிந்தராவ் அறிவுறுத்தியுள்ளார்.

Raja raja cholan sathya vizha 2020
Raja raja cholan sathya vizha 2020

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…