மீண்டும் வயநாடு எம்.பி., ஆனார் ராகுல் காந்தி:
குஜராத் பிரசாரத்தில் ‘மோடி’ என்கிற சமூகத்தினர் குறித்து தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்திக்கு 2 வருட சிறை தண்டனை வழங்கப்பட்டது. இதனைக் காரணம் காட்டி அவர் எம்.பி., பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனை எதிர்த்து ராகுல் காந்தி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் 2 ஆண்டுகால சிறை தண்டனைக்கு இடைக்கால தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இதனையடுத்து ராகுல் காந்தி மீண்டும் எம்.பியாக தொடர்வார் என்றும், மீண்டும் நாடாளுமன்றம் செல்வார் என்று சொல்லப்பட்ட நிலையில் அவரை மக்களவை உறுப்பினராக தொடர வழிவகை செய்யுமாறு சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு, மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கடிதம் மூலம் கோரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க 👉 தக்காளி விலை ரூ.50 ஆக குறைவு! முழுவிவரம் இதோ
இந்நிலையில் தற்போது ராகுல்காந்தி வயநாடு எம்.பி.யாக தொடர்வார் என்று மக்களவை செயலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து இன்றே அவர் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் பங்கேற்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் அடுத்த இரு தினங்களில் வரவிருக்கும் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதும் ராகுல் காந்தி பேச இருக்கிறார்.
இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…
எங்களது YOUTUBE சேனலை காண