ஹத்ராஸ் சென்ற ராகுல் காந்தி உத்தரப்பிரதேச போலீசாரால் கைது!

0
Rahul Gandhi Arrested earlier of visiting Hathras
Rahul Gandhi Arrested earlier of visiting Hathras

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸில், கடந்த செப்டம்பர் 14 -ஆம் தேதி நான்கு இரக்கமற்ற ஆண்களால் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 19- வயது இளம்பெண் சிகிச்சைப் பலனின்றி நேற்று உயிரிழந்தார். இந்த கொடூர செயலுக்கு 3 நபர்கள் கொண்ட சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், இக்குழுவிற்கு உத்தரபிரதேச மாநில உள்துறை செயலர் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், ஒரு வாரத்தில் அறிக்கை சமர்பிக்க உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

Rahul Gandhi Arrested earlier of visiting Hathras
Rahul Gandhi Arrested earlier of visiting Hathras

இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தை பார்க்க அனுமதி மறுக்கப்பட்டதால் ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் நடந்தே ஹத்ராஸ் சென்றனர். முன்னெச்சரிக்கையாக ஹத்ரஸ் மாவட்டத்தில் வெளியாட்கள் நுழையாதவாறும், உள்ளூர் மக்கள் வெளியில் சுற்றத்தவாறும் தடுக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், 144 தடையை மீறி கூட்டு பாலியல் வன்கொடுமை ஆளாக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தை சந்திக்க சென்றபோது ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் தடுத்து நிறுத்தபட்டனர். மேலும், இருவரும் உத்தரப்பிரதேச போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது, மேலும் போலீசார் தன்னை கீழே தள்ளிவிட்டு அடித்ததாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...