பொன்மகள் வந்தாள் படத்தை பார்த்து நெகிழ்ந்து பாராட்டிய ராதிகா!

0
Radhika Praised the movie Ponmagal Vandhal

ஜோதிகா நடிப்பில் சூர்யாவின் 2D என்டர்டைன்மென்ட் தாயரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பொன்மகள் வந்தாள்’.

Radhika Praised the movie Ponmagal Vandhal
Ponmagal Vandhal from May 29

அறிமுக இயக்குனர் ஜேஜே பெட்ரிக் இயக்கியுள்ள இப்படத்தில் பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், தியாகராஜன், பிரதாப் போத்தன் என பலரும் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் வரும் மே 29 -ஆம் தேதி(நாளை) நேரடி வெளியீடாக அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இன்று பிரபலங்களுக்கு ஸ்பெஷல் காட்சி இணையம் வழியாக காண்பிக்கப்பட்டது. இதனை பார்த்த பிரபலங்கள் பெருமாலானோர் இப்படத்தை நெகிழ்ந்து பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் நடிகை ராதிகா சரத்குமார் தனது பாராட்டை டுவிட்டர் வழியாக தெரிவித்துள்ளார்.

Radhika Praised the movie Ponmagal Vandhal
Radhika Sarathkumar

அவர் கூறியுள்ளதாவது, “இணையத்தில் பொன்மகள் வந்தாள் படத்தின் சிறப்புக் காட்சியை பார்த்தேன். அருமையான மற்றும் வலுவான கதைக்களம் கொண்ட படமாக அமைந்துள்ளது. சமூக அக்கறையோடு எடுக்கப்பட்ட இந்த படத்திற்காக சூரியா மற்றும் ஜோதிகாவிற்கு எனது வாழ்த்துக்கள்” என தனது கருத்தை கூறியுள்ளார்.

Twitter Feed:

 

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...