பேன் இந்திய நடிகையான ராதிகா ஆப்தே ரசிகர்களின் அதீத ஆர்வம் தன்னை தொல்லைப் படுத்துவதாக கூறி அதற்கான காரணங்கள் சிலவற்றை பகிர்ந்துள்ளார்.


தமிழில் பிரகாஷ் ராஜ் இயக்கிய தோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா, கபாலி உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் ராதிகா ஆப்தே. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மராத்தி, பெங்காலி மற்றும் ஆங்கில படங்கள் வரை நடித்து முடித்துள்ளார் ராதிகா. (உச்சக்கட்ட ஆபாச காட்சிகளிலும் நடித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளார் என்பது கூடுதல் தகவல்). லண்டன் காதலரை மணந்து தற்போது லண்டனில் வசித்து வரும் ராதிகா, லண்டன் தெருக்களில் செல்லும்போது அங்குள்ள ரசிகர்கள் அவருடன் போட்டோ எடுப்பதற்காக முண்டியடித்துக் கொண்டு மேலே வந்து விழுவது தனக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை என கூறியுள்ளார். மேலும் இதைவிட விமானத்தில் ஒருமுறை செல்லும் போது ரசிகர் ஒருவர் செல்பி எடுக்கவேண்டும் தொடர்ந்து கேட்க, நான் வேண்டாம் என திட்டி விட்டு உறங்கி விட்டேன்.
ஆனாலும் அந்த நபர் விடுவதாயில்லை, நான் கண் விழித்து பார்த்த போது தன்னுடைய தொலைபேசியை வைத்து தன் முன்னர் செல்பி எடுத்துக் கொண்டு நின்று கொண்டிருந்தார். அதை பார்த்த எனக்கு சரியான டென்ஷனாகி கத்தி விட்டேன் என கூறியுள்ளார். இதுபோன்ற வரம்பு மீறும் ரசிகர்களை கண்டாலே எனக்கு பிடிக்காது எனவும் கூறியுள்ளார்.
———————– மேலும் உங்கள் பார்வைக்கு ————————-
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘பெண்குயின்’ வரும் ஜூன் 19 முதல் அமேசான் பிரைமில்
👉 கருப்பு புடவையில் ரசிகர்களை கவர்ந்த அனசுயா பரத்வாஜ்!
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...