ராதே ஷ்யாம் திரைப்பட விமர்சனம் | Radhe Shyam Movie Review & Rating

0
Radhe Shyam Movie Review & Rating
Radhe Shyam Movie Review & Rating

ராதே ஷ்யாம் திரைப்பட விமர்சனம் | Radhe Shyam Movie Review & Rating

படக்குழு:

நடிகர்கள்: பிரபாஸ், பூஜா ஹெக்டே, பாக்யஸ்ரீ, சத்யராஜ், கிருஷ்ணம் ராஜூ மற்றும் பலர்.

இசை: பாடல்கள்: ஜஸ்டின் பிரபாகரன், மிதுன், அமால் மாலிக்

பின்னணி இசை: தமன், சஞ்சித் பல்ஹாரா, அங்கிட் பல்ஹாரா

ஒளிப்பதிவு: மனோஜ் பரமஹம்சா

எடிட்டிங்: கோத்தகிரி வெங்கடேஸ்வரா ராவ்

தயாரிப்பு: UV கிரியேஷன்ஸ் & T சீரீஸ்

இயக்கம்: ராதா கிருஷ்ண குமார்.

Radhe Shyam Movie Review & Rating
Radhe Shyam Movie Review & Rating

கதைச்சுருக்கம்:

கதைப்படி உலகிலேயே சிறந்த கைரேகை ஜோசியராக படத்தின் நாயகன் பிரபாஸ், ஒரே முறை கை ரேகையையும், முகத்தையும் பார்த்தே மொத்த ஜாதகத்தையும் சொல்லிவிடும் அளவிற்கு திறமைசாலி. ஆனால் அவருக்கோ காதல் ரேகையே இல்லை என தெரிந்தும் நாயகி பூஜா ஹெக்டே மீது காதல் கொள்கிறார். ஊருக்கே ஜாதகம் சொல்லும் இவரது கணிப்பு பலித்ததா? இல்லை காதல் ஜெயித்ததா? என்பதே கதைச்சுருக்கம்.

Radhe Shyam Movie Review & RatingRadhe Shyam Movie Review & Rating
Radhe Shyam Movie Review & Rating

FC விமர்சனம்:

பாகுபலிக்கு பிறகு இந்திய சினிமா மார்கெட்டில் உச்சத்தை தொட்ட பிரபாஸ் அடுத்து நடித்த சாஹோ படத்தில் சறுக்கினார். எப்படியாவது வெற்றியை கொடுத்துவிட வேண்டும் என்கிற இலக்கில் அவர் முடிவு செய்த திரைப்படம் தான் இந்த ராதே ஷ்யாம். சரி, வாங்க படம் எப்படி என பார்ப்போம். நடிகர்களை பொறுத்தவரை பிரபாஸ், அவர் வேலையை நன்றாக செய்திருந்தாலும், சில இடங்களில் அவரது முகமே கிராபிக்ஸ் செய்தது போல தெரிகிறது. அந்தளவு மேக்கப் வொர்ஸ்ட். நாயகி பூஜா ஹெக்டே அழகிலும், நடிப்பிலும் எந்த குறையுமில்லை. இவர்களை தவிர சத்யராஜ் உள்பட மற்ற நடிகர்களும் கொடுத்த வேலையை நிறைவாக செய்துள்ளனர். ஆனால் என்ன சொல்லும் அளவிற்கு எந்தவொரு கதாப்பத்திரமும் எழுதப்பட வில்லை என்பதே சோகமான உண்மை..

இப்படத்தின் பெரிய(ஒரே) பலமே பிரம்மாண்டமான காட்சியமைப்பும், இசையும் தான். ஜஸ்டின் பிரபாகரனின் இசையில் பாடல்கள் அருமை, தமனின் பின்னணி இசையிலும் குறையில்லை. மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு டாப் கிளாஸ், அந்தளவிற்கு ஒவ்வொரு காட்சியிலும் அழகையும், நேர்த்தியான லைட்டிங்கையும் கொண்டு விளையாடியுள்ளார். அதேபோல், VFX & கலை சார்ந்த நபர்களின் வேலையும் சில இடங்களில் பங்களிப்பை இப்படத்திற்கு கொடுத்துள்ளது. இவையெல்லாம் சேர்த்துதான் ஒரு ஹாலிவுட் படத்திற்கு இணையான இந்திய படத்தை கொடுக்க நினைத்திருகிறார்கள், ஆனால் அது முழுமையாக கரை சேரவில்லை.

Radhe Shyam Movie Review & Rating
Radhe Shyam Movie Review & Rating

இவையெல்லாம் மிக நன்றாக கிடைத்தும் கதை & திரைக்கதையில் பெரிதளவு கோட்டைவிட்டுள்ளார் இயக்குனர். முழுக்க முழுக்க கிராபிக்ஸ், பிரம்மாண்டத்தை நம்பியே படம் உருவாக்கப்பட்டுள்ளது. அதனால் பெரும் ஏமாற்றம், மேலும் கதையில் நம்பகத்தன்மை துளியும் இல்லை. காதல் என்பதை கையிலெடுத்தால் கோடி சினிமா இதுவரை வந்துள்ளது, இனியும் வருமளவிற்கு நிறைய விஷயங்களும் உண்டு. ஆனால் ஜோசியம் அது இதுன்னு போட்டு குழப்பி கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பை நாசப்படுதியுள்ளார் இயக்குனர் ராதா கிருஷ்ண குமார்..

கிராபிக்ஸ் பல இடங்களில் சொதப்பல் அதிலும் கிளைமாக்ஸ் கப்பலில் வைத்து இவர்கள் ஆடியுள்ள கூத்து, மிகப்பெரிய பின்னனடைவாக அமைந்துள்ளது. அந்தளவிற்கு ஏதோ கார்டூன் படம் பார்ப்பதுபோல் இருந்தது, ஏன் இப்படி? டைட்டானிக் மாதிரி எடுக்க ஆசைப்பட்டதில் தவறில்லை, அதற்கு ஏற்ற உழைப்பையும், அறிவையும் பயன்படுத்த வேண்டாமா! என கோபம் வருவதை தவிர்க்க முடியல்லை. அப்படி எல்லாத்தையும் க்ரீன் மேட்டிலேயே வைத்து எடுத்து சொதப்பியுள்ளனர். இறுதியாக படம் எப்படி என்றால்? துளியும் சுவாரஸ்யம் இல்லாத திரைக்கதை கொண்ட ஃபேன்டசி கார்ட்டூன் (காதல்) படமாக வந்துள்ளது இந்த ராதே ஷ்யாம்.. (என்னதான் ஆச்சு பிரபாஸுக்கு? கதை கேட்பாரா? மாட்டாரா? பாகுபலியின் உழைப்பும், பெயரும் படத்திற்கு படம் வீணாகிறது என்பதே வருத்தத்திற்குரிய ஒன்று).

(பாராட்டுக்கள் ஒளிப்பதிவு, இசை)

  Radhe Shyam Movie FC Rating: 2.5 /5  

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்