‘புத்தம் புது காலை’ ஆந்தாலாஜி திரை விமர்சனம்

0
Putham Pudhu Kaalai Movie Review

படக்குழு: 

நடிகர்கள்: ஜெயராம், ஊர்வசி, எம்.எஸ்.பாஸ்கர், சுஹாசினி, அனுஹாசன், ஆண்ட்ரியா, காளிதாஸ் ஜெயராம், ஸ்ருதி ஹாசன், கல்யாணி ப்ரியதர்ஷன், ரித்து வர்மா, பாபி சிம்ஹா மற்றும் பலர்.

இசை: ஜிவி பிரகாஷ், கோவிந்த் வசந்தா, நிவாஸ் K பிரசன்னா, சதீஷ் ரகுநாதன்.

ஒளிப்பதிவு: P.C. ஸ்ரீராம், நிகேத் பொம்மி, ராஜுவ் மேனன், செல்வகுமார் & ஸ்ரேயாஸ் கிருஷ்ணா.

எடிட்டிங்: ஆண்டனி, சங்கத்தமிழன், ஸ்ரீகர் பிரசாத், T.S. பிரசாத் & விவேக் ஹர்ஷன்.

இயக்கம்: கௌதம் மேனன், சுதா கொங்கரா, சுஹாஷினி, ராஜீவ் மேனன் & கார்த்திக் சுப்பராஜ்.

வெளியீடு: அமேசான் பிரைம்.

Putham Pudhu Kaalai Movie Review
Putham Pudhu Kaalai Movie Review

கதைக்களம்: 

கொரோனா லாக்டவுனில் நடக்கும் உணர்வு மிகுந்த விஷயங்களை கருவாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. ஒவ்வொரு கதைக்கும் சம்மந்தம் இல்லாத ஐந்து குறும்படங்களின் தொகுப்பு இந்த புத்தம் புது காலை. முதல் கதை சுதா கோங்கரா இயக்கியிருக்கும் இளமை இதோ, இதோ, மனைவியை இழந்த ஒரு ஆணுக்கும் கணவனை இழந்த பெண்ணும் இடையிலான காதலே இந்தப் படத்தின் கதை. இரண்டாம் கதை, கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியிருக்கும் அவரும் நானும் – அவளும் நானும், காதல் திருமணம் செய்துகொண்ட தன் மகளை, ஏற்றுக் கொள்ளாமல் ஒதுக்கிய தாத்தாவுக்கும், அவரது பேத்திக்கும் இடையிலான பாச போராட்டமே இப்படத்தின் கதை.

மூன்றாவது சுஹாசினி மணிரத்னம் இயக்கியுள்ள காஃபி எனி ஓன்?, கோமாவில் இருக்கும் தனது மனைவியை, கோமாவிலிருந்து மீட்க துடிக்கும் கணவன். இறுதியாக மீட்டாரா? என்பதே இப்படத்தின் கதை. நான்காவது ராஜீவ் மேனனின் ரீயூனியன், கொரோனா காலத்தில் தன் பள்ளித் தோழனின் வீட்டில் வந்து தங்கும் கதாநாயகிக்கு போதைப் பழக்கம் இருக்கிறது. அதிலிருந்து அந்த தோழன் மீட்டாரா? இல்லையா? என்பதை மாடர்னாக கூறியிருக்கும் கதையே இந்த ரீயூனியன். கடைசியாக கார்த்திக் சுப்பராஜின் மிராக்கில், கொரோனா காலத்தில் திருட்டில் ஈடுபடும் இருவர், நினைத்தது போலவே அவர்கள் வாழ்வில் மிராக்கிள் நடந்ததா? இல்லையா? என்பதே இப்படத்தின் கதை.

Putham Pudhu Kaalai Movie Review
Putham Pudhu Kaalai Movie Review

FC விமர்சனம்:

மேற்கண்ட இந்த ஐந்து படங்களுமே ஒன்றுக்கு ஒன்று சளைத்தது அல்ல. ஒவ்வொரு படமுமே ஒவ்வொரு விதமான உணர்வை நம்முள் ஏற்படுத்துகிறது. அதற்கு முக்கிய காரணம் இதில் நடித்த அனைத்து நடிகர்களுமே, கிட்டத்தட்ட அனைவருமே தங்களுக்கான பணியை செவ்வனே செய்து முடித்துள்ளனர். குறிப்பாக எம்.எஸ். பாஸ்கர் மனுஷன் பின்னி எடுத்துட்டார், அதேபோல் ஜெயராம் & ஊர்வசி மிக அருமை. இளம் நடிகர்களான ஆண்ட்ரியா, காளிதால், கல்யாணி, ரித்து வர்மா & ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட அனைவருமே மிகையில்லாத நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

Putham Pudhu Kaalai Movie Review
Putham Pudhu Kaalai Movie Review

ஒளிப்பதிவும், இசையும் பெரிய பலமாக இப்படத்திற்கு அமைந்துள்ளது. ஒவ்வொரு படத்திற்கும் ஒவ்வொரு ஒளிப்பதிவாளர்கள் எனினும் அனைவருமே அழகாக படமாக்கியிருக்கிறார்கள். என்ன எல்லாம் மிகையா? குறையே இல்லையா? என கேட்காதீர்கள், குறையில்லாமல் எது உள்ளது? இப்படத்தில் கதாப்பாத்திரங்கள் மிக குறைவு என்பதால், பல இடங்களில் வரும் நாடகத்தன்மை உறுத்தலாக தெரிகிறது. மேலும், இதில் வரும் ஐந்தில், நான்கு கதைகளுமே வசதி படைத்த அதாவது ரிச் பீபிலாக இருப்பதால் நமக்கு கொஞ்சம் ஒட்டாமல் விலகி நிற்கிறது. வழக்கம்போல் ஆங்கங்கே வரும் போர் அடிக்கும் காட்சிகள் சற்று குறையாக தெரிகிறது. இறுதியாக, பாசிடிவ் நிறைந்த, உறவுகளின் மீது காதல் கொண்டிருப்போர், லைட் ஹார்டட் படங்களை விரும்புவோர் கவனத்திற்கு இந்த புத்தம் புது காலை…

FC RATING: 3.5 /5

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...