புஷ்பா திரைப்பட விமர்சனம் | Pushpa Movie Review and Rating

0
Pushpa Movie Review and Rating
Pushpa Movie Review and Rating

புஷ்பா திரைப்பட விமர்சனம்

படக்குழு:

நடிகர்கள்: அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் பாசில், அனசுயா மற்றும் பலர்.

இசை: தேவி ஸ்ரீ பிரசாத்

ஒளிப்பதிவு: மிரோஸ்லாவ் குபா ப்ரோ செக்

எடிட்டிங்: கார்த்திகா ஸ்ரீனிவாஸ், ரூபன்

தயாரிப்பு: மைத்ரி மூவி மேக்கர்ஸ்

இயக்கம்: சுகுமார்.

Pushpa Movie Review and Rating
Pushpa Movie Review and Rating

கதைச்சுருக்கம்:

ஆந்திர காட்டுப்பகுதிகளில் வளரும் செம்மரங்களை வெட்டி திருட்டுத்தனமாக கடத்தும் படத்தின் நாயகன் புஷ்பா என்கிற புஷ்பராஜ். சிறிதளவில் துவங்கிய இந்த திருட்டு தொழில் மூலம் வளர்ந்து இந்த தொழிலில் பெரிய டானாக மாறுகிறார். (இதற்கிடையே நாயகியுடன் காதல், குறும்புகள் எல்லாம் ஒருபக்கம்). இதன்பிறகு, இந்த தொழிலால் ஏற்படும் பகை, நாயகனை என்ன செய்தது? எப்படி வில்லன்களை வீழ்த்தினார்? என்கிற பார்த்து சலித்த விஷயங்களே மீதிக் கதை.

Pushpa Movie Review and Rating
Pushpa Movie Review and Rating

FC விமர்சனம்:

தமிழ், தெலுங்கு, கன்னடம் என மிக பெரிய பில்டப்புடன், பான் இந்திய படமாக இன்று வெளியாகியுள்ள புஷ்பா திரைப்படம் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்ததா? இல்லையா? என்பதை பார்ப்போம். முதலில் நடிகர்கள் அல்லு அர்ஜுன் ஒருவருக்காக மட்டுமே இந்த படம் என்று சொல்லலாம், அந்தளவு ஒவ்வொரு காட்சியிலும் ரசிக்க வைக்கிறார். நாயகி ராஷ்மிகா கிளாமருக்காக மட்டுமே வந்து செல்கிறார். இவரை விட, ஐட்டம் பாடலுக்கு வரும் சமந்தா நிறைய ஸ்கோர் செய்துள்ளார். மற்றபடி மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பகத் பாசில் கதாப்பாத்திரம் மிகவும் ஏமாற்றமளிக்கும்படி அமைந்துள்ளது. அதேபோல், ஏகப்பட்ட வில்லன்கள் வந்து நம்மை சோதித்து பார்க்கின்றனர். 

படத்தின் பெரிய பலம் மிரோஸ்லாவ் குபாவின் ஒளிப்பதிவும், தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையும் தான். படமுழுக்க நாம் ஓரளவு உட்காந்திருக்க முடிகிறது என்றால் அதற்கு இவர்கள் இருவரும் தான் காரணம், அந்தளவு நேர்த்தியான ஒளிப்பதிவு, கேட்கும்படியான பாடல்கள். அதேபோல், சண்டைக் காட்சிகளும் பெருமளவு ரசிக்கும்படி அமைந்துள்ளது. எடிட்டர் சண்டைக் காட்சிகளை மட்டும் மிக அருமையாக கட் செய்துவிட்டு, முழு படத்தையும் கண்டுக்காமலே விட்டுவிட்டாரோ என்கிற சந்தேகம் எழுகிறது! ஏனெனில் கிட்டத்தட்ட 3 மணி நேரம், இரண்டு படம் பார்த்த பீலிங் அதுவே படத்திற்கு பெரிய குறையாக அமைந்துள்ளது. இதுமட்டும் தான் குறையா என்றால், இல்லை பெருமளவு குறைகள்தான். 

Pushpa Movie Review and Rating
Pushpa Movie Review and Rating

இப்படத்தின் கதை ஒன்றும் புதிதில்லை என்றாலும் அதை திரைக்கதையில் சுவாரஸ்யமூட்டிருக்கலாம் அதிலும் கோட்டை விட்டுள்ளனர். அதேபோல் எந்தவொரு கதாப்பாத்திரமும் பெரிதளவு ஈர்க்கும் படி இல்லை. எல்லாவற்றையும் விட, இது பான் இந்தியா மூவி என பயங்கர விளம்பரம் செய்தார்கள், அதை நம்பி சென்றால் பெருத்த ஏமாற்றம் தான் மிச்சம். இப்படம் முழுக்க முழுக்க நெடி ஏறும் தெலுங்கு படமே! இதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். இறுதியாக படம் எப்படி என்றால், அதிதீவிர கமெர்ஷியல் ரசிகர்களா நீங்கள்? இப்படம் உங்களுக்காக மட்டுமே… 

பாராட்டுக்கள் – ஒளிப்பதிவு, இசை, சமந்தா, சண்டைக் காட்சிகள் & அல்லு அர்ஜுன் கரிஷ்மா

 
   Pushpa Movie FC Rating – 2.5 /5  

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்