‘புஷ்பா 2’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு:
தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் ‘புஷ்பா 2’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்து வரும் இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, சாய் பல்லவி, ஃபகத் பாசில் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
ரூ.500 கோடி பட்ஜெட்டில் உருவாகிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி, புஷ்பா 2 திரைப்படம் அடுத்த ஆண்டு சுதந்திர தினத்தன்று (ஆகஸ்ட் 15, 2024) வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதுக்குறித்த புதிய போஸ்டர் ஒன்றும் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…
எங்களது YOUTUBE சேனலை காண