‘அவனவன் சுதந்திரத்தில் தலையிடுவது மனித உரிமை மீறல்?’ தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி

0
Producer Suresh Kamatchi Angry Tweet
Producer Suresh Kamatchi Angry Tweet

சிலம்பரசன் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாநாடு. சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இப்படம் தீபாவளி வெளியீடு என அறிவிக்கப்பட்டது. ஆனால் அண்ணாத்த ரிலீஸ் போன்ற சில காரணங்களால் நவம்பர் 25-ஆம் தேதி தள்ளிவைக்கப்பட்டது. எனவே படக்குழு தற்போது வெளியீட்டை நோக்கி காத்திருக்கிறது, இந்நிலையில் அவர்களுக்கு அதிர்ச்சியூட்டும் விதமாக அமைந்துள்ளது அரசின் அறிவிப்பு.

Producer Suresh Kamatchi Angry Tweet
Producer Suresh Kamatchi Angry Tweet

கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே தியேட்டர்களில் அனுமதிக்கப்பட வேண்டும் என்கிற அறிவிப்பை அரசானை மூலம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பானது மாநாடு படத்தின் வசூலை பெரிதளவு பாதிக்கும் என்பதால் படக்குழு அதிர்ச்சியில் உறைந்துள்ளது. இந்நிலையில் இதுக்குறித்து இப்பட தயாரிப்பாளர் கூறியுள்ளதாவது, “உலகத்திலேயே திரையரங்கிற்கு செல்ல தடுப்பூசி கேட்பது இங்குதான் முதல்முறை… அவனவன் சுதந்திரத்தில் தலையிடுவது எவ்வளவு பெரிய மனித உரிமை மீறல்?? முன்பு போலவே திரையரங்கிற்குள் மக்களை அனுமதிக்க வேண்டும்!” என தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்