‘8 நிமிஷ இன்டர்வல் பிளாக் தெறிக்கும்’ லியோ குறித்து தயாரிப்பாளர் லலித்:
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் லியோ. செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ தயாரித்துள்ள இப்படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், ப்ரியா ஆனந்த், மடோனா செபாஸ்டியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.


இப்படம் குறித்து தயாரிப்பாளர் லலித் சமீபத்தில் பேட்டி ஒன்றில், ” படம் ரொம்ப நல்லா வந்துருக்கு. அதிலும் 8 நிமிடம் வரும் இன்டர்வல் காட்சி எங்களுக்கே Goosebumps ஆகிடுச்சி. தியேட்டரில் ரசிகர்கள் கண்டிப்பாக கொண்டாடுவார்கள்” என கூறியுள்ளார். இந்த செய்தி விஜய் ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்க செய்துள்ளது.
இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…
எங்களது YOUTUBE சேனலை காண