பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை போல தளபதி 66!

0
Producer Dil Raju about Thalapathy 66
Producer Dil Raju about Thalapathy 66

நடிகர் விஜய் தற்போது நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தாண்டு ஏப்ரல் இப்படம் வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது. 

Producer Dil Raju about Thalapathy 66Producer Dil Raju about Thalapathy 66
Producer Dil Raju about Thalapathy 66

இப்படத்தை தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு படத்தில் நடிக்கவுள்ளார். பிரபல தயாரிப்பாளர் தில் ராஜூ இப்படத்தை தயாரிக்கவுள்ளார். இந்நிலையில் இப்படம் குறித்து தில் ராஜூ கூறியதாவது, “இப்படம் நல்லதொரு பீல் குட் படமாக வரும். இந்த கதையை கேட்டு விஜய் 20 வருடங்களுக்கு பிறகு இதுபோன்ற நல்ல கதையை கேட்டுள்ளேன் எனவும், பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை போல இப்படம் அமையும் என கூறியதாக தில் ராஜூ தெரிவித்திருந்தார்.

மேலும், வரும் மார்ச் மாதம் இப்படத்தின் படபிடிப்பு துவங்கவுள்ளதாகவும், கொரோனாவை பொறுத்து இந்தாண்டு தீபாவளி(2022) அல்லது அடுத்த ஆண்டு(2023) பொங்கல் தளபதி 66 படத்தை வெளியிட முடிவு செய்துள்ளதாகவும்” கூறியுள்ளார்.

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்