ரஜினி படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிக்கும் ‘டாக்டர்’ பட நடிகை

0
Priyanka Mohan Joins with Superstar Rajini Kanth
Priyanka Mohan Joins with Superstar Rajini Kanth

ரஜினி படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிக்கும் ‘டாக்டர்’ பட நடிகை: ‘கேங் லீடர்’ என்கிற தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமாகியிருந்தாலும், தமிழில் சிவகார்த்திகேயனுடன் டாக்டர் படத்தின் மூலம் அறிமுகமானார் பிரியங்கா மோகன். நெல்சன் இப்படத்தை இயக்கியிருந்தார்.

இதை தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்தார். அடுத்து மீண்டும் சிவகார்த்திகேயனுடன் டான் படத்தில் நடித்துள்ளார். விரைவில் இப்படம் வெளியாகவுள்ளது.

Priyanka Mohan Joins with Superstar Rajini Kanth
Priyanka Mohan Joins with Superstar Rajini Kanth

தொடர்ந்து ஏறுமுகத்தில் இருக்கும் பிரியங்கா மோகன் அடுத்து உச்ச நட்சத்திரமான ரஜினிகாந்துடன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நெல்சன் இயக்கத்தில் உருவாகவுள்ள தலைவர் 169(தற்காலிக பெயர்) படத்தில் ரஜினியுடன் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுக்குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE 

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்