கிரிக்கெட் அணி போன்று ஒரு டஜன் பிள்ளைகள் பெற்றுக்கொள்ள ஆசை! பிரபல நடிகை

0
Priyanka Chopra says cricket team of kids with Nick Jonas
Priyanka Chopra says cricket team of kids with Nick Jonas

தளபதி விஜயின் ‘தமிழன்’ படம் மூலம் அறிமுகமானவர் முன்னாள் உலக அழகி பிரியங்கா சோப்ரா. இவர் தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார், மேலும் ஹாலிவுட் படங்கள் வரை நடித்துள்ளார். இவர் கடந்த 2018 -ஆம் ஆண்டு தன்னை விட 10 வயது சிறியவரான நிக் ஜோன்ஸ் என்கிற அமெரிக்க பாடகரை திருமணம் செய்துக்கொண்டார். அவர்கள் எந்தவித பிரச்சினையும் இன்றி நிம்மதியாக வாழ்ந்தாலும், ரசிகர்கள் விடுவதாயில்லை. பிரியங்கா சோப்ரா குறித்து கிண்டல் செய்யும் மீம்ஸ்களை இணையத்தில் உலாவிட்டு வருகின்றனர்.

Priyanka Chopra says cricket team of kids with Nick Jonas
Priyanka Chopra says cricket team of kids with Nick Jonas

இந்நிலையில் இதுக்குறித்து பிரியங்கா கூறியுள்ளதாவது, “எனக்கும், நிக்கிற்கு இடையேயான உறவில் எந்த பிரச்சனையும் இல்லை. வயது ஒரு பிரச்சனையே இல்லை, இந்திய கலாச்சாரத்தை நிக், புரிந்துக்கொண்டுள்ளார். எங்கள் உறவு சாதாரண ஜோடிகளை போல ஒருவரை ஒருவர் புரிந்து வாழ்ந்து வருகிறோம். நான் குழந்தைப்
பெற்றுக்கொள்ள ஆவலாக இருக்கிறேன். அதுவும் ஒன்றல்ல, ஒரு கிரிக்கெட் அணி போன்று ஒரு டஜன் பெற்றுக்கொள்ள ஆசை” என மீம்ஸ் போட்டவர்கள் வாயடைக்க கூறியுள்ளார்.

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...