ரசிகர்களின் மோசமான விமர்சனங்கள் எனக்கு வேதனையளிக்கிறது – பிரியா வாரியர்

0
Priya Prakash Varrier Latest Instagram Video

‘ஒரு அடார் லவ்’ என்கிற ஒரே படத்தின் மூலம், சொல்ல போனால் அந்த கண் அடிக்கும் ஒரே காட்சியில் இந்தியா முழுக்க பிரபலமடைந்தார் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர்.

Priya Prakash Varrier Latest Instagram Video
Priya Prakash Varrier

ஆனால் அந்த படம் நினைத்த வெற்றியை பெறாமல் தோல்வியை தழுவ, அதன்பிறகு சினிமா வாழ்க்கை பெரிதும் கைக்கொடுகாமல் இருந்து வருகிறது. இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கமே கதி என்று தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வருகிறார். படங்கள், வீடியோக்கள் என ஏதாவது ஒன்று பதிவிட்ட வண்ணமே இருந்த பிரியா, கடந்த இரண்டு வாரங்களாக எதுவும் பதிவிடாமல் ஒதுங்கியிருந்தார். இந்நிலையில் மீண்டும் ஒரு வீடியோவுடன் இன்ஸ்டாவில் கம்பேக் கொடுத்துள்ளார் பிரியா. அந்த வீடியோவில் கூறியுள்ளதாவது, ” கடந்த இரண்டு வாரங்களில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன், இருப்பினும், இது எனது தொழில்முறை இடம் என்பதால், நான் திரும்பி வந்துள்ளேன். லைக்ஸ், ஃபாலோஸ் மற்றும் வியூஸ் குறித்து நான் அழுத்தமாக இருப்பதாக உணர்ந்தேன். எனவே, லாக்டவுனில் அதிக நேரம் சமூகவலைத்தளங்களில் செலவிட்டதால்  ஒரு சிறிய பிரேக் தேவைப்பட்டது. ரசிகர்கள் அளித்த மோசமான கமெண்ட்டுகள் காரணமாகவே சமூக வலைத்தளத்தில் இருந்து விலகியதாகவும், ஆரோக்கியமான விமர்சனங்களை ரசிகர்கள் வைக்க வேண்டும்” என கூறியுள்ளார். 

வீடியோ:

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Priya Prakash Varrier💫 (@priya.p.varrier) on

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...